காவேரிப்பாக்கம் ஒன்றியத்தில் மாவட்ட கவுன்சிலராக திமுக வேட்பாளர் வெற்றி


காவேரிப்பாக்கம் ஒன்றியத்தில் மாவட்ட கவுன்சிலராக திமுக வேட்பாளர் வெற்றி
x
தினத்தந்தி 12 Oct 2021 8:00 PM GMT (Updated: 12 Oct 2021 8:00 PM GMT)

காவேரிப்பாக்கம் ஒன்றியத்தில் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட திமுக வேட்பாளர் வெற்றிபெற்றார்

காவேரிப்பாக்கம்

காவேரிப்பாக்கம் ஒன்றியத்தில் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் வெற்றிபெற்றார்.

தி.மு.க. வெற்றி

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் ஒன்றியத்திற்கு கடந்த 9-ந் தேதி ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்தது. 253 பதவிக்கு  நடந்த வாக்கு எண்ணிக்கை மையமான ஓச்சேரியில் உள்ள சப்தகிரி பொறியியல் கல்லூரியில் நேற்று நடந்தது. 
இதில் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு தி.மு.க.சார்பில் போட்டியிட்ட சக்தி வெற்றி பெற்றார். ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் 1-வது வார்டு முனியம்மா கணேசன் (சுயேச்்சை), 2-வது வார்டு ராணிசேட்டு (தி.மு.க.), 3-வது வார்டு கோமதிகுமார் (சுயேச்சை), 4-வது வார்டு மாரிமுத்து (காங்கிரஸ்), 5-வது வார்டு யுவராஜ் (அ.தி.மு.க), 6-வது வார்டு அனிதா (தி.மு.க.) 7-வது வார்டு குமாரி (தி.மு.க.), 8-வது வார்டு தீபா (பா.ம.க.) 9-வது வார்டு ஞானமணி (தி.மு.க.) 10-வது வார்டு வசந்த்குமார் (தி.மு.க.) என 5 தி.மு.க. வேட்பாளர்கள், 2 சுயேச்சை வேட்பாளர்கள், அ.தி.மு.க, பா.ம.க., காங்கிரஸ் வேட்பாளர்கள் தலா ஒருவர் வெற்றி பெற்றுள்ளனர். 

ஊராட்சி மன்ற தலைவர்கள்

ஊராட்சி மன்ற தலைவர்களாக அர்ஜூனன் (பாணாவரம்), யசோதா சேகர் (மங்கலம்), லோகநாயகி விநாயகம் (புதூர்), தியாவதி ராஜாராம் (கூத்தம்பாக்கம்), ஜி.செல்வி (கர்ணாவூர்), சுந்தரம் (புதுப்பட்டு), ருக்குமணி (சிறுவளையம்), குமரேசன் (பெருவளையம்) லட்சுமி (பன்னியூர்), பரிமளா (மாகாணிபட்டு), அலமேலு (கட்டளை), மரியா பிரகாசி கிருஷ்ணன் (ஆலப்பாக்கம்), செல்லக்கிளி மூர்த்தி (துரைபெரும்பாக்கம்), திவ்யபாரதி (ஈராளச்சேரி), மனோகர் (உத்திரம்பட்டு) அனிதா முரளி (தருமநீதி) ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். 
வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. மீதமுள்ள ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு வாக்கு எண்ணப்பட்டு வருகிறது. 

Next Story