கிராம பஞ்சாயத்து 9 வார்டுகளில் உறுப்பினர்களுக்கான தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் விவரம்


கிராம பஞ்சாயத்து 9 வார்டுகளில் உறுப்பினர்களுக்கான தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் விவரம்
x
தினத்தந்தி 12 Oct 2021 8:05 PM GMT (Updated: 12 Oct 2021 8:05 PM GMT)

ஊரக உள்ளாட்சி தேர்தலில் கிராம பஞ்சாயத்து 9 வார்டுகளில் உறுப்பினர்களுக்கான தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளன.

திருச்சி, அக்.13-
ஊரக உள்ளாட்சி தேர்தலில் கிராம பஞ்சாயத்து 9 வார்டுகளில் உறுப்பினர்களுக்கான தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளன.
9 வார்டு உறுப்பினர்கள்
திருச்சி மாவட்டத்தில் 3 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கும், 2 பஞ்சாயத்து தலைவர் பதவி மற்றும் 9 கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிக்குமான வாக்கு எண்ணிக்கை நேற்று அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் நடந்தது. 9 வார்டுகளுக்கான உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்ற வேட்பாளர்கள் விவரம் வருமாறு:-
அந்த நல்லூர் ஊராட்சி ஒன்றியம் போசம்பட்டி கிராம பஞ்சாயத்து 7-வது வார்டு (பொது-பெண்கள்) உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட சுசிலா வெற்றி பெற்றார். அவர் பெற்ற வாக்குகள் 207. அவரை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர் சுகன்யா 205 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.
2 வாக்குகள் வித்தியாசம்
தொட்டியம் ஊராட்சி ஒன்றியம் ஸ்ரீராமசமுத்திரம் கிராம பஞ்சாயத்து 5-வது வார்டு (பொது) உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட ஆ.பிரபு 114 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதித்து போட்டியிட்ட ஹரிகிருஷ்ணண் 112 வாக்குகள் பெற்று, அதாவது 2 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். மேலும் கு.சந்திரசேகரன் 12 வாக்குகள் எடுத்து டெபாசிட் தொகையும் இழந்தார்.
சேனப்பநல்லூர்
துறையூர் ஊராட்சி ஒன்றியம் சேனப்பநல்லூர் கிராம பஞ்சாயத்து 2-வது வார்டு (பொது-பெண்கள்) உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட சி.நந்தகுமாரி 98 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர் சூர்யா 76 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.
தாத்தையங்கார்பேட்டை ஊராட்சி ஒன்றியம் பைத்தம்பாரை கிராம பஞ்சாயத்து 4-வது வார்டு (பொது-பெண்கள்) உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட மு.ஆனந்தி 79 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். எதிர்த்து போட்டியிட்ட வெ.சகுந்தலா 64 வாக்குகள் பெற்று தோல்வியை தழுவினார்.
திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றியம் கீழக்குறிச்சி கிராம பஞ்சாயத்து 10-வது வார்டு (பொது-பெண்கள்) உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட பாத்திமாமேரி 189 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். எதிர்த்து போட்டியிட்ட கோ.ராஜேஸ்வரி 71 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.
பழங்கனாங்குடி
திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றியம் பழங்கனாங்குடி கிராம பஞ்சாயத்து 9-வது வார்டு (பொது) உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட ச.மோகன் 59 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். வேட்பாளர் சுதாகரன் 17 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். மேலும் சு.சுதாகர்-5, வைரக்கண்ணு-16 வாக்குகள் பெற்று டெபாசிட் தொகையை இழந்தனர்.
மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியம் ஓமந்தூர் கிராம பஞ்சாயத்து 1-வது வார்டு (பொது) உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட ப.பெரியசாமி 113 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். எதிர்த்து போட்டியிட்ட ஆ.ராஜ்குமார்-99, கவுசிகந்-14 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தனர்.
ஆங்கியம்
மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியம் கொணலை கிராம பஞ்சாயத்து 8-வது வார்டு (பொது-பெண்கள்) உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட பி.சந்திரா 118 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். எதிர்த்து போட்டியிட்ட ஜான்சி தெய்வமணி 85 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.
உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியம் ஆங்கியம் கிராம பஞ்சாயத்து 6-வது வார்டு (பொது-பெண்கள்) உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட கா.மோகனா 62 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். எதிர்த்து போட்டியிட்ட தி.கோமதி 51 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.

Next Story