விபத்தில் மெக்கானிக் பலி


விபத்தில் மெக்கானிக் பலி
x
தினத்தந்தி 13 Oct 2021 1:38 AM IST (Updated: 13 Oct 2021 1:38 AM IST)
t-max-icont-min-icon

சிவகாசி அருகே விபத்தில் ெமக்கானிக் பலியானார்.

சிவகாசி, 
சிவகாசி தாலுகாவில் உள்ள சன்னாசிபட்டியை சேர்ந்தவர் பாபுராஜ் (வயது 39). இவர் சிவகாசியில் மெக்கானிக் கடை வைத்திருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு  சிவகாசியில் இருந்து விளம்பட்டிக்கு மோட்டார் சைக்களில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஒத்தப்புலி என்ற இடத்தில் சென்ற போது பின்னால் வந்த சரக்கு வாகனம் மோதியதில் பாபுராஜ் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து அவரது மனைவி வீரலட்சுமி மாரனேரி போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி விபத்துக்கு காரணமான சரக்கு வாகனத்தை ஓட்டி வந்த அம்மன் கோவில்பட்டியை சேர்ந்த காளீஸ்வரன் (28) என்பவரை கைது செய்தனர்.

Related Tags :
Next Story