கோவிலில் திருட்டுபோன குத்துவிளக்குகள் மீட்பு


கோவிலில் திருட்டுபோன குத்துவிளக்குகள் மீட்பு
x
தினத்தந்தி 12 Oct 2021 8:11 PM GMT (Updated: 12 Oct 2021 8:11 PM GMT)

கோவிலில் திருட்டுபோன குத்துவிளக்குகள் மீட்கப்பட்டன.

செந்துறை:
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே கீழராயம்புரம் கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற நல்லப்பா கோவிலில் கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 22-ந் தேதி மர்ம நபர்கள் பூட்டை உடைத்து, அங்கிருந்த 22 குத்துவிளக்குகள் மற்றும் வெண்கல மணிகளை திருடிச்சென்றனர். இதுகுறித்து இரும்புலிக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் ஆர்.எஸ்.மாத்தூர் அருகே உள்ள அல்ரான்குடிக்காடு கிராமத்தை சேர்ந்த 5 பேரை பிடித்து நடத்திய விசாரணையில், அவர்கள் குத்துவிளக்குகளை திருடிச் சென்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்களிடம் இருந்து 15 குத்துவிளக்குகளை மீட்டு செந்துறை கோர்ட்டில் போலீசார் ஒப்படைத்தனர். இந்த நிலையில் மீட்கப்பட்ட குத்து விளக்குகளை செந்துறை குற்றவியல் நீதிபதி செந்தில்குமார், கோவில் நிர்வாகத்திடம் நேற்று ஒப்படைத்தார்.

Next Story