மாவட்டங்களில் மேலும் 11 பேருக்கு கொரோனா
மாவட்டங்களில் மேலும் 11 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை 12 ஆயிரத்து 3 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர். இவர்களில் 11 ஆயிரத்து 695 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். நேற்று அறிவிக்கப்பட்ட பரிசோதனை முடிவின்படி பெரம்பலூர் ஒன்றியத்தில் 3 பேர், வேப்பந்தட்டை ஒன்றியத்தில் 2 பேர், வேப்பூர் ஒன்றியத்தில் ஒருவர் என மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.அரியலூர் மாவட்டத்தில் நேற்று 5 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே சிகிச்சையில் இருந்தவர்களில் 5 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். நேற்று கொரோனாவுக்கு யாரும் உயிரிழக்கவில்லை.
Related Tags :
Next Story