மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்தவர் சாவு + "||" + Death of a motorcyclist

மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்தவர் சாவு

மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்தவர் சாவு
மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்தவர் பரிதாபமாக இறந்தார்.
குன்னம்:
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள வேப்பூர் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் சேட்டு முகமது (வயது 51). இவர் நெல் அறுவடை செய்யும் எந்திரம் வைத்து தொழில் நடத்தி வந்தார். இந்நிலையில் நெல் அறுவடை எந்திரத்தில் ஏற்பட்ட பழுதை சரி செய்துவிட்டு, நேற்று முன்தினம் இரவு பெரம்பலூரில் இருந்து எறையூர், பெருமத்தூர் வழியாக வேப்பூருக்கு தனது மோட்டார் சைக்கிளில் வந்தார். அப்போது பலத்த மழை பெய்தது. வைத்தியநாதபுரம் பிரிவு சாலையில் துணை மின் நிலையம் அருகே வந்தபோது நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து அவர் கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த அடிபட்ட நிலையில், அவரை உறவினர்கள் மீட்டு உடனடியாக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து குன்னம் போலீசில் சேட்டுமுகமதுவின் மனைவி ரகமானி கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் தேவராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. சிறுமி திடீர் சாவு
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கோவில் பிரசாதத்தை சாப்பிட்ட சிறுமி மர்மமான முறையில் இறந்தார்.
2. விபத்தில் மெக்கானிக் பலி
சிவகாசி அருகே விபத்தில் ெமக்கானிக் பலியானார்.
3. சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 3 மாடுகள் சாவு
சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 3 மாடுகள் செத்தன
4. கொரோனாவுக்கு மூதாட்டி சாவு
மதுரையில் கொரோனாவுக்கு மூதாட்டி பலியானார்.
5. தீயில் கருகி மூதாட்டி பலி
ராஜபாளையத்தில் தீயில் கருகி மூதாட்டி பரிதாபமாக இறந்தார்.