3½ பவுன் நகை திருட்டு


3½ பவுன் நகை திருட்டு
x
தினத்தந்தி 13 Oct 2021 1:43 AM IST (Updated: 13 Oct 2021 1:43 AM IST)
t-max-icont-min-icon

ராஜபாளையத்தில் 3½ பவுன் நகையை மர்மநபர்கள் திருடி சென்றனர்.

ராஜபாளையம் 
ராஜபாளையம் சிங்கராஜாக்கோட்டை தெருவை சேர்ந்தவர் ராம்ராஜ் (வயது 64). இவரது வீட்டில் மல்லிகா (51) என்ற பெண் கடந்த 6 வருடங்களாக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ராம்ராஜ் சென்னை செல்வதற்கு மல்லிகாவை வீட்டை பார்த்துக் கொள்ளும்படி கூறிவிட்டு சாவியை ஒப்படைத்து விட்டு சென்று விட்டார். சென்னைக்கு சென்றுவிட்டு கடந்த மாதம் 7-ந் தேதி வீட்டிற்கு திரும்பி வந்த ராம்ராஜ் உள்ளே சென்று பார்த்தபோது துணிமணிகள் அனைத்தும் சிதறிக்கிடந்துள்ளது. அப்போது பெட்டியில் வைத்திருந்த 3½ பவுன் தங்க நகை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதன் பிறகு வீட்டு வேலை செய்து வந்த மல்லிகாவிடம் விசாரித்தபோது. ராம்ராஜ் சென்னை சென்றிருந்த போது மல்லிகாவின் மகன் மாரியப்பன் (25) வந்து சென்றதாகவும் ஒரு வேலை அவர் எடுத்திருக்கலாம் என்றும் தான் விசாரித்து வாங்கி தருகிறேன் என்றும் மல்லிகா கூறியுள்ளார். ஒரு மாதம் ஆகியும் நகையை திருப்பி தராததால் ராம்ராஜ், ராஜபாளையம் தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அய்யனார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story