தினத்தந்தி புகார் பெட்டி


பெரம்பலூர்
x
பெரம்பலூர்
தினத்தந்தி 13 Oct 2021 1:44 AM IST (Updated: 13 Oct 2021 1:44 AM IST)
t-max-icont-min-icon

'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி 
திருச்சி அரிஸ்டோ ரவுண்டானா அருகே உள்ள திண்டுக்கல் சாலையில் உள்ள ஒரு பெட்ரோல் விற்பனை நிலையத்தின் எதிரே சாலையின் அடியில் பதியப்பட்டுள்ள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி வந்தது. இதுகுறித்து தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து குடிநீர் வீணாவதை தடுத்தனர். இதற்காக செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர். 
பொதுமக்கள், திருச்சி. 


குண்டும், குழியுமான தார்ச்சாலை 
திருச்சி மாவட்டம், நாகமநாயக்கன்பட்டி முதல் சேனப்பநல்லூர் வரை சாலை குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். சாலையில் ஆங்காங்கே பள்ளம் இருப்பதால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் நிலையதடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
சிவக்குமார், நாகமநாயக்கன்பட்டி, திருச்சி. 

தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி 
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம் பேரளியில் மருவத்தூர் வரையிலான சாலையில் தார் ஆலை அருகில் மின்கம்பி கீழே தொங்கி கொண்டிருந்த நிலையில், தினத்தந்தி புகார் பெட்டி பக்கத்தில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து தற்போது மின்கம்பத்தை மாற்றி அமைக்கப்பட்டு கம்பி இழுத்து கட்டப்பட்டது. இதற்காக தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர். 
பொதுமக்கள், மருவத்தூர், பெரம்பலூர். 

வடிகால் வசதி ஏற்படுத்தப்படுமா? 
திருச்சி 60-வது வார்டு மருதண்டகுறிச்சி சந்தோஷ் நகர் குடியிருப்பு பகுதியில் முறையான வடிகால் வாய்க்கால் அமைக்கப்படாததால் அப்பகுதியில் மழைநீர் செல்ல வழியின்றி ஆங்காங்கே தாழ்வான பகுதிகளில் தேங்கி நிற்கிறது. மேலும் மண் சாலையில் மழைநீர் தேங்கி நிற்பதால் சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், திருச்சி. 

ஆபத்தை உணராமல் அமைக்கப்பட்டுள்ள மரக்கம்பு
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், பெ.குடிக்காடு ரோவர் பள்ளி முதல் எழுமூர் செல்லும் சாலையில் எழுமூர் ஓடை அருகே மின்கம்பிகளை தாங்கி நிற்கும் வகையில், சவுக்குமர கம்புகள் அமைக்கப்பட்டுள்ளன. மழை பெய்யும்போது இந்த மரக்கம்பு அருகே கால்நடைகள் சென்றால் அவை மின்சாரம் பாய்ந்து உயிரிழக்க அதிக வாய்ப்பு உள்ளது. மேலும் சாலையில் பொதுமக்கள் செல்லும்போது இந்த மரக்கம்பு அவர்கள் மீது விழுந்தால் அவர்கள் காயம் அடைய அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், எழுமூர், பெரம்பலூர்.

குப்பைகளால் சுகாதார சீர்கேடு 
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை குமரன் நகரில் அமனாங்குளம் செல்லும் சாலை  ஓரத்தில் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளன. இதனால் அப்பகுதியில் சுகாதார  சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதில் மழைநீர் தேங்குவதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் இதில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாகி அப்பகுதியில் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
அருள்ஜோதி, குமரன்நகர், புதுக்கோட்டை. 

நாகலூர் ஓடையை சீரமைக்க கோரிக்கை 
அரியலூர் மாவட்டம்,  புதுப்பாளையம் ஊராட்சி, நெருஞ்சிக்கோரை கிராமத்தில் நாகலூர் ஓடை சீரமைப்பு செய்யப்படாததால் அருகில் உள்ள விவசாய நிலங்களில் மழைநீர் புகுந்து பயிர்கள் சேதம் அடைந்துள்ளன. இதனால் விவசாயிகள் என்ன செய்வது என்று தெரியாமல் உள்ளனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து நாகலூர் ஓடையை சீரமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
விஸ்வநாதன்,  புதுப்பாளையம், அரியலூர். 

உடைந்து கிடக்கும் இருக்கைகள் 
திருச்சி மாவட்டம், துறையூர் நகரில் பாலக்கரை பஸ் நிறுத்தத்தில் பயணிகள் அமரும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டு இருந்தன. இந்த இருக்கைகள் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது அவை உடைந்து காணப்படுகிறது. இதனால் பயணிகள்  அமரமுடியாமல் கால்கடுக்க நிற்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பழுதடைந்த இருக்கைகளை சரிசெய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
ஜீவன்மயில், துறையூர், திருச்சி. 

வயல்வெளிபோல் காட்சி அளிக்கும் சாலை 
திருச்சி மாவட்டம், அரியமங்கலம் கோட்டம், 7-வது வார்டு விஸ்வாஸ் நகர் செல்லும் சாலை சேறும், சகதியுமாக வயல்வெளிபோல் காட்சி அளிக்கிறது. இதனால் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் மற்றும் நடந்து செல்லும் பெண்கள், குழந்தைகள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
 மு.சையது முஸ்தபா, பூக்கொல்லை தெரு, திருச்சி.

உயிர்பலி வாங்க காத்திருக்கும் மின்கம்பம் 
கரூர் மாவட்டம்,   பள்ளப்பட்டியில் மக்கள் மன்றம் பின்புறம் உள்ள மின்கம்பத்தின் மேல் பகுதியில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால் அந்த மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் கீழே விழுந்து உயிரிழப்பு ஏற்படலாம் எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை  எடுக்க வேண்டும்  என கேட்டுக்கொள்கிறோம். 
மணிவேல், அண்ணாநகர், கரூர். 

பாதாள சாக்கடை அமைக்கும் பணியால் பொதுமக்கள் அவதி 
திருச்சி மாவட்டம், குளாப்பட்டி 37-வது வார்டு விமான நிலையம் அருகே உள்ள ஒரு தனியார் பள்ளி செல்லும் சாலை முழுவதும் பாதாள சாக்கடை அமைப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் அந்த பணிகள் நடைபெறாமல் பள்ளத்தில் இருந்து எடுக்கப்பட்ட மண்கள் சாலையில் சேறும் சகதியுமாக காட்சி அளிக்கிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அகிதாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
மகேஸ்வரி, திருச்சி. 

அதிகரிக்கும் தெருநாய்களால் பொதுமக்கள் அச்சம் 
திருச்சி மாவட்டம், காட்டூர்  பகுதி அம்மன் நகரில் தெருநாய்களின் எண்ணிக்கை அதிக அளவில் காணப்படுகிறது. இவை அப்பகுதியில் சாலையில் செல்லும் கால்நடைகளை கடிப்பதுடன்  இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை துரத்தி செல்கிறது. இதனால் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். மேலும் சாலையில் குழந்தைகள், பெண்கள் நடந்து செல்ல அச்சப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
கிருஷ்ணா வர்மா, காட்டூர், திருச்சி. 

மயான வசதி ஏற்படுத்தப்படுமா? 
திருச்சி மாவட்டம், முசிறி வட்டம் பேரூர் ஊராட்சிக்கு உட்பட்ட கிழக்கு ராக்கம்பட்டியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அவர்களில் யாரேனும் உயிரிழந்துவிட்டால் உடலை தகனம் செய்ய மயான வசதி இல்லை. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பிரவீன்குமார், கிழக்கு ராக்கம்பட்டி, திருச்சி. 


தோண்டப்பட்ட பள்ளம் மூடப்படுமா? 
திருச்சி தில்லை நகர் 4-வது  குறுக்குத்தெருவில் பாதாள சாக்கடை அமைக்க பெரிய பெரிய சிமெண்டு தொட்டிகள் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு புதைக்கப்பட்டது. ஆனால் அதனை சுற்றி மண்ணை நிறப்பாமல் அப்படியே போட்டுவிட்டு சென்றுவிட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
தினகரன், திருச்சி. 

Next Story