கணியம்படி ஒன்றியத்தில் வெற்றிபெற்ற ஊராட்சி மன்ற தலைவர் ஒன்றிய கவுன்சிலர்கள்
கணியம்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்ற ஊராட்சி மன்ற தலைவர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அடுக்கம்பாறை
கணியம்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்ற ஊராட்சி மன்ற தலைவர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அதன் விவரம் வருமாறு:
ஊராட்சி மன்ற தலைவர்கள்
அடுக்கம்பாறை- திருநாவுக்கரசு, கம்பசமுதிரம்- முருகேசன், கம்மவான்பேட்டை- கவிதா, கணிகணியான்- ஏழுமலை, கணியம்பாடி-செல்வி, கத்தாழம்பட்டு- நதியா, காட்டுப்புத்தூர்- சசிகலா, கீழ்அரசம்பட்டு- வெங்கடேசன், கீழ்பள்ளிப்பட்டு- விஜயபாஸ்கர், மோத்தக்கல்- உஷா, மோட்டுபாளையம்- அருள்பாரி, மூஞ்சூர்பட்டு- குமார், நஞ்சுகொண்டபுரம்- சீதா, நெல்வாய்- மணிமேகலை, பாலம்பாக்கம்- கீதா, பாலாத்துவண்ணான்- வெங்கடேசன், சலமநத்தம்- ராணி, சாத்துமதுரை- ஜோதிலட்சுமி ராஜ்குமார், சாத்துபாளையம்- தேவி, சோழவரம்- அமுதா, துத்திகாடு- பாபு, துத்திபட்டு- ரவிச்சந்திரன், வல்லம்- சிவகுமார், வேப்பம்பட்டு- ராஜன்.
வெற்றிபெற்ற இவர்களுக்கு வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.
14-வது வார்டு மாவட்ட வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் தேவி சிவா 19,941 வாக்குகள் பெற்று வெற்றி அடைந்தார்.
ஒன்றிய கவுன்சிலர்
1-வது வார்டு சீனிவாசன் (தி.மு.க.), 2-வது வார்டு வேலாயுதம் (பா.ம.க.), 3-வது வார்டு லதா (தி.மு.க.) 4-வது வார்டு மணிமேகலை (தி.மு.க.), 5-வது வார்டு திவ்யா (தி.மு.க.), 6-வது வார்டு சகாதேவன் (தி.மு.க.), 7-வது வார்டு ஜெயலட்சுமி (பா.ம.க.), 8-வது வார்டு விஸ்வநாதன் (அ.தி.மு.க.), 9-வது வார்டு கஜேந்திரன் (தி.மு.க.), 10-வது வார்டு நதியா (பா.ம.க.), 11-வது வார்டு தங்கம்மாள் (தி.மு.க.), 12-வது வார்டு எழிலரசி (அ.தி.மு.க.), 13-வது வார்டு வனிதா (சுயேச்சை).
இதில் தி.மு.க வேட்பாளர்கள் 7 பேர், பா.ம.க. வேட்பாளர்கள் 3 பேர், அ.தி.மு.க. வேட்பாளர்கள் 2 பேர் மற்றும் ஒரு சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
13-வது வார்டில் வெற்றி பெற்ற சுயேச்சை வேட்பாளருக்கும், பா.ம.க. வேட்பாளருக்கும் இடையே குறைந்த ஓட்டு வித்தியம் உள்ளதால் மீண்டும் வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் நள்ளிரவு 12 மணி அளவில் பா.ம.க.வேட்பாளரின் ஆதரவாளர்கள் கேட்டனர். ஆனால் சுயேச்சை வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவித்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story