மாவட்ட பஞ்சாயத்து, யூனியன் வார்டுகள் அனைத்திலும் தி.மு.க. வெற்றி


மாவட்ட பஞ்சாயத்து, யூனியன் வார்டுகள் அனைத்திலும் தி.மு.க. வெற்றி
x
தினத்தந்தி 13 Oct 2021 1:53 AM IST (Updated: 13 Oct 2021 1:53 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் மாவட்ட பஞ்சாயத்து மற்றும் பஞ்சாயத்து யூனியன், வார்டு உறுப்பினர் தேர்தலில் அனைத்து இடங்களிலும் தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது.

விருதுநகர், 
விருதுநகர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் மாவட்ட பஞ்சாயத்து மற்றும் பஞ்சாயத்து யூனியன்,  வார்டு உறுப்பினர் தேர்தலில் அனைத்து இடங்களிலும் தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது.
தி.மு.க. வெற்றி 
மாவட்டத்தில் ஒரு மாவட்ட பஞ்சாயத்து வார்டு உறுப்பினர், 3 பஞ்சாயத்து யூனியன் வார்டு உறுப்பினர்கள் பதவி இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. இந்த 4 வார்டு உறுப்பினர்கள் பதவி இடங்களிலும்  தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி  பெற்றனர். அவர்கள் பெயர் விவரம் வருமாறு:-
மாவட்ட பஞ்சாயத்து 19-வது வார்டு உறுப்பினர் பதவி இடத்திற்கு தி.மு.க. வேட்பாளர் பகவதி திருவேங்கடசாமி வெற்றி பெற்றுள்ளார். பஞ்சாயத்து யூனியன் வார்டுஉறுப்பினர் பதவி இடங்களில் விருதுநகர் யூனியன் 12-வது வார்டில் தி.மு.க. வேட்பாளர் ரவிச்சந்திரனும், ராஜபாளையம் யூனியன் 13-வது வார்டில் தி.மு.க. வேட்பாளர் காமராஜும், 15-வது வார்டில் தி.மு.க. கூட்டணி வேட்பாளர் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் பகத்சிங்கும் வெற்றி பெற்றுள்ளனர்.
கிராம பஞ்சாயத்து
 கிராம பஞ்சாயத்து தலைவர் பதவி இடங்களுக்கு காரியாபட்டி யூனியன் அழகியநல்லூர் பஞ்சாயத்து தலைவராக செல்வராஜீம், நரிக்குடி யூனியன் உளுத்திமடை பஞ்சாயத்து தலைவராக ரேவதியும், என்.முக்குளம் பஞ்சாயத்து தலைவராக இப்ராகீம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
 விருதுநகர் யூனியன் பாவாலி பஞ்சாயத்து தலைவராக அழகம்மாள் வெற்றி பெற்றுள்ளார். வார்டு உறுப்பினர், கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினராக அருப்புக்கோட்டை யூனியன் மலைப்பட்டி கிராம பஞ்சாயத்து 9-வது வார்டு உறுப்பினராக மகிமாவும், வில்லிபத்திரி பஞ்சாயத்து 3-வதுவார்டு உறுப்பினராக முத்துலட்சுமியும், 5-வது வார்டு உறுப்பினராக வசந்தகுமாரும், 8-வது வார்டுக்கு தேவேந்திரனும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். காரியாபட்டி யூனியன் வழுக்கலொட்டி பஞ்சாயத்து 6-வது வார்டு உறுப்பினராக சுமதியும், ராஜபாளையம் யூனியன் சோழபுரம் பஞ்சாயத்து 7-வதுவார்டு உறுப்பினராக ஜெயமேரியும், மேல ராஜகுலராமன் பஞ்சாயத்து 6-வதுவார்டு உறுப்பினராக சுஜாதாவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
வெம்பக்கோட்டை யூனியன் 
 சாத்தூர் யூனியன் எம். நாகலாபுரம் பஞ்சாயத்து 4-வதுவார்டு உறுப்பினராக மகேந்திரனும், சூரங்குடி பஞ்சாயத்து 3-வது வார்டு உறுப்பினராக தனலட்சுமியும், சிவகாசி யூனியன் சித்துராஜபுரம் 13-வது வார்டு உறுப்பினராக சாந்தகுமாரியும், விஸ்வநத்தம் 6-வது வார்டு உறுப்பினராக பெரியசாமியும், விருதுநகர் இ.முத்துலிங்காபுரம் 5-வதுவார்டு உறுப்பினராக நாராயணசாமியும், சிவஞானபுரம் 9-வதுவார்டு உறுப்பினராக பாலாஜி ராஜனும், வெம்பக்கோட்டை யூனியன் குண்டாயிருப்பு பஞ்சாயத்து 4-வது வார்டு உறுப்பினராக அருண்மொழியும், வெற்றிலையூரணி பஞ்சாயத்து 8-வது வார்டு உறுப்பினராக தமிழ்ச்செல்வியும், ஸ்ரீவில்லிபுத்தூர் யூனியன் கரிசல்குளம் பஞ்சாயத்து 4-வதுவார்டு உறுப்பினராக மாரிச்சாமியும், கோட்டைப்பட்டி பஞ்சாயத்து 2-வது வார்டு உறுப்பினராக மாலதியும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

Next Story