சிறுமி திடீர் சாவு


சிறுமி திடீர் சாவு
x
தினத்தந்தி 12 Oct 2021 8:26 PM GMT (Updated: 12 Oct 2021 8:26 PM GMT)

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கோவில் பிரசாதத்தை சாப்பிட்ட சிறுமி மர்மமான முறையில் இறந்தார்.

ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கோவில் பிரசாதத்தை சாப்பிட்ட சிறுமி மர்மமான முறையில் இறந்தார். 
மூச்சுத்திறணல் 
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்துள்ள விழுப்பனூரை சேர்ந்தவர் முத்துக்குட்டி. இவருடைய மகள் பிரேமா. இவருக்கும் தேனியை சேர்ந்த சுகுமார் என்பவருக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது. இவர்களுக்கு 2 குழந்தைகள்.  இந்தநிலையில் பிரேமா தனது குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். இதில் 2-வது குழந்தை ஜெயப்பிரியா (வயது 4). 
சம்பவத்தன்று இரவில் சிறுமி ஜெயப்பிரியாவுக்கு  கோவில் பிரசாதம் ெகாடுத்ததாகவும், அதை சாப்பிட்ட அவள் தூங்கச் சென்றதாகவும் கூறப்படுகிறது.
மறுநாள் காலையில் ெஜயப்பிரியாவுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. 
சிறுமி சாவு 
உடனே அவளை சிகிச்சைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.  அப்போது அவரை பரிசோதனை செய்த டாக்டர், ஏற்கனவே சிறுமி இறந்து விட்டதாக கூறினர். 
இதுகுறித்து சிறுமியின் தாத்தா முத்துக்குட்டி. கிருஷ்ணன்கோவில் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவில் பிரசாதம் சாப்பிட்டதால் சிறுமி இறந்தாளா? அல்லது வேறு எதுவும் காரணமா? என விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Tags :
Next Story