இருவர்குளம் கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு
நரிக்குடி அருகே உள்ள இருவர்குளம் கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு உள்ளதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
காரியாபட்டி,
நரிக்குடி அருகே உள்ள இருவர்குளம் கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு உள்ளதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
குடிநீர் தட்டுப்பாடு
நரிக்குடி ஊராட்சி ஒன்றியம், சாலை இலுப்பை குளம் ஊராட்சிக்குட்பட்டது இருவர்குளம் கிராமம். இங்கு குடிநீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்த பகுதிக்கு தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் வாரத்திற்கு ஒரு முறை மட்டும் தண்ணீர் வருவதால் இந்த பகுதி மக்கள் குடிநீருக்காக மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். வாரத்திற்கு ஒரு முறை தண்ணீர் வருவதால் பண்டிகை காலங்களில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு விடுகிறது.
தண்ணீர் வினியோகம்
இதனால் தண்ணீர் லாரி மூலம் இந்த பகுதி மக்களுக்கு தேவையான தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறுது.
இந்த கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க 2 நாட்களுக்கு ஒரு முறை தாமிரபரணி தண்ணீர் போதிய அளவில் கிடைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story