தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டி
குப்பைகளால் சுகாதார சீர்கேடு
இனயம்புத்தன்துறை சுனாமி தெருவிற்கும் (கயல்நகர்) ராமன்துறை சுனாமி தெருவிற்கும் இடையே சாலை அமைந்துள்ளது. இந்த சாலையின் ஓரம் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் குப்பைகளை கொட்டி வருகிறார்கள். இதனால் அந்த பகுதியில் மிகுந்த துர்நாற்றம் வீசுவதால் சாலையில் நடந்து செல்பவர்களும், வாகன ஓட்டிகளும் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள். மேலும், தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே, சாலையோரம் குப்பைகள் கொட்டுவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சகாயராஜ், இனயம்புத்தன்துறை
பொதுமக்களுக்கு அச்சுறுத்தல்
நாகர்கோவில் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி அருகில் சாலையோரம் சில முதியோர்கள் தங்கியிருந்து அந்த வழியாக செல்பவர்களிடம் பிச்சை எடுக்கிறார்கள். சில நேரங்களில் அவர்களுக்குள் மோதல் ஏற்படுகிறது. இதனால், அந்த வழியாக ெசல்லும் பொதுமக்களுக்கு சில நேரங்களில் அச்சுறுத்தல் ஏற்படுகிறது. எனவே, இவர்களை காப்பகத்தில் தங்க வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கிருஷ்ணகுமார், தலக்குளம்.
மண்சரிவு ஏற்படும் அபாயம்
மார்த்தாண்டம் அருகே உள்ள கண்ணக்கோடு பகுதியில் தாமிரபரணி ஆறு மற்றும் ரெயில்வே சுரங்ப்பாதைக்கு இடைப்பட்ட பகுதியில் சுமார் 1½ அடி அகலத்தில் நடை பாதை செல்கிறது. இந்த பகுதி உயரமாக அமைந்துள்ளதால் மழைக்காலங்களில் மண் சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் கொண்டு அசம்பாவிதம் நடைபெறும் முன் தடுப்பு சுவர் கட்டி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-எழில்ராஜ், கண்ணக்கோடு.
வடிகால் ஓடை வேண்டும்
பொன்மனையில் இருந்து ஈஞ்சக்கோடு செல்லும் சாலையில் போதிய வடிகால் ஓடை அமைக்கப்படவில்லை. மழைக்காலங்கள் தண்ணீர் குளம்போல் ேதங்கி நிற்கிறது. இதனால், அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள். எனவே, இதற்கு தீர்வு காணும் வகையில் சாலைேயாரம் வடிகால் ஓடை அமைக்க வேண்டும்.
-விஸ்வநாதன், பொன்மனை.
சாலையில் வீணாகும் குடிநீர்
சுவாமியார்மடம்-வேர்கிளம்பி சாலையில் செட்டிச்சார்விளை குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், குடிநீர் வீணாக சாலையில் பாய்கிறது. அத்துடன் வீடுகளுக்கு சரியாக குடிநீர் செல்வதில்லை. எனவே, குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஜெஸ்பின், சிராயன்குழி.
தெருவில் தேங்கும் மழைநீர்
பீமநகரி ஊராட்சிக்கு உட்பட்ட அன்னை நகர் 2-வது தெருவில் மழை நீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதியில் நடந்து செல்ல முடியாமல் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள். மேலும், அந்த பகுதியில் உள்ள கட்டிடங்களும் பாதிக்கப்படுகிறது. எனவே, தெருவில் மழைநீர் தேங்காதவாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சுரேஷ், தேரூர்.
சாலை சீரமைக்கப்படுமா?
நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பஸ் நிறுத்தம் முன் உள்ள சாலை மிகவும் குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால், பஸ்சுக்காக காத்து நிற்கும் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மிகவும் அவதிப்படுகிறார்கள். எனவே, பொதுமக்கள் நலன்கருதி சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-ஜெகதீஸ், நாகர்கோவில்.
Related Tags :
Next Story