பட்டதாரி பெண் தூக்குப்போட்டு தற்கொலை


பட்டதாரி பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 13 Oct 2021 3:43 AM IST (Updated: 13 Oct 2021 3:43 AM IST)
t-max-icont-min-icon

குளச்சல் அருகே பட்டதாரி பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

குளச்சல்:
குளச்சல் அருகே பட்டதாரி பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பட்டதாரி பெண்
குளச்சல் அருகே உள்ள கோடிமுனையை சேர்ந்தவர் ஜாண்ராயன், மீனவர். இவருக்கு ஜெய மிலானி என்ற மனைவியும், 2  மகன்களும், ஏஞ்சல் (வயது 25) என்ற மகளும் உண்டு. ஏஞ்சல் எம்.ஏ., பி.எட். முடித்து வேலை தேடி வந்தார். இதற்கிடையே அவருக்கு குடும்பத்தினர் திருமண ஏற்பாடு செய்ய தொடங்கினர். 
சென்னையில் வசிக்கும் குமரி மாவட்டத்தை சேர்ந்த ஒரு வாலிபருடன் கடந்த மே மாதம் திருமணத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. பின்னர், ஏஞ்சலுக்கு மாப்பிள்ளை பிடிக்காததால் இரு வீட்டாரும் திருமணத்தை நிறுத்தினர்.
 தற்கொலை
இந்தநிலையில் கடந்த சில நாட்களாக ஏஞ்சல் மனமுடைந்த நிலையில் காணப்பட்டதாக கூறப்படுகிறது. நேற்று மதியம் ஏஞ்சலின் தாயார் அருகில் உள்ள ஆலயத்துக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பினர்.
அப்போது, வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. இதனால், சந்தேமடைந்த அவர் ஜன்னல் வழியாக பார்த்தபோது ஏஞ்சல் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்து அலறினார். பின்னர், அவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஏஞ்சலை மீட்டு குளச்சலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே ஏஞ்சல் இறந்து விட்டதாக கூறினார்கள்.
இதுபற்றி குளச்சல் போலீசில் ஜெயமிலானி புகார் செய்தார். அதன்பேரில் ஏஞ்சலின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி ைவத்தனர். 
சோகம்
இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏஞ்சல் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பட்டதாரி பெண் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story