2 நகை கடைகளில் பூட்டை உடைத்து 15 பவுன் கொள்ளை
நித்திரவிளையில் 2 நகை கடைகளின் பூட்டை உடைத்து 15 பவுன்களை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றனர்.
கொல்லங்கோடு:
நித்திரவிளையில் 2 நகை கடைகளின் பூட்டை உடைத்து 15 பவுன்களை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றனர்.
நகை கடைகள்
குமரி மாவட்டத்தில் உள்ள நித்திரவிளை பகுதியை சேர்ந்தவர்கள் விஸ்வம்பரன் (வயது55), ராஜகோபால் (70). இவர்கள் அந்த பகுதியில் நகை கடைகள் நடத்தி வருகிறார்கள். நேற்று முன்தினம் வியாபாரம் முடிந்த பின்பு கடைகளை பூட்டிவிட்டு சென்றனர்.
நேற்று காலையில் இருவரும் வழக்கம்போல் கடைகளை திறக்க சென்றனர். விஸ்வம்பரன் கடைக்கு சென்ற போது பூட்டு உடைக்கப்பட்டு கடையின் ஷட்டர் திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கடையின் உள்ளே சென்று பார்த்த போது அங்கு பொருட்கள் அனைத்தும் சிதறிக்கிடந்தன. மேலும் கடையில் இருந்த 9 பவுன் நகைகள் ெகாள்ைளயடிக்க பட்டிருந்தது தெரியவந்து.
இதே போல் பக்கத்தில் உள்ள ராஜகோபால் கடையின் பூட்டும் உடைக்கப்பட்டு இருந்தது. அங்கு இருந்த 6¼ பவுன் நகைகள் கொள்ளையடிக்க பட்டிருந்தது தெரியவந்தது.
இவற்றை பார்த்த கடைகளின் உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து நித்திரவிளை போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கொள்ளை நடந்த கடைகளை பார்வையிட்டனர்.
கண்காணிப்பு கேமரா காட்சி
தொடர்ந்து அங்கு பொருத்தி இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அப்போது, முகமூடி அணிந்த 2 மர்ம நபர்கள் கையில் குடை மற்றும் டார்ச் லைட்டுடன் வருகிறார்கள். அவர்கள் முதலில் ஒரு கடையின் முன்னால் அமர்ந்து பூட்டை பிளைடு மூலம் அறுத்து ஷட்டரை திறந்து உள்ளே செல்கிறார்கள். பின்னர், நகைகளை திருடி விட்டு மெதுவாக வெளியே வருகிறார்கள். இதுபோல் மற்றொரு கடையிலும் கொள்ளையடித்துவிட்டு தப்பி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தன.
இந்த காட்சிகளின் அடிப்படையில் கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களைபோலீசார் தேடி வருகிறார்கள்.
தொடரும் சம்பவங்கள்
கடந்த வாரம் இந்த பகுதியில் ஒரு ஏ.டி.எம். மையத்தில் கொள்ளை முயற்சி நடந்தது. அந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களும், நகை கடையில்கொள்ளையில் ஈடுபட்டவர்களும் ஒரேபோல் உள்ளதாக கூறப்படுகிறது. எனவே, ஏ.டி.எம். மையத்தில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர்கள்தான் நகை கடையில்கொள்ளையிலும் ஈடுபட்டதாக போலீசார் கருதுகிறார்கள். அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story