20 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 9 மாதத்தில் 20 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 9 மாதத்தில் 20 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசி
நாடு முழுவதும் கொரோனா கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. இதன் காரணமாக பல நாடுகளில் ஏராளமானவர்கள் பலியாகினர். கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதனால் இதனை தடுக்கும் விதமாக தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது. இந்த தடுப்பூசி தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் 16-ந் தேதியில் இருந்து செலுத்தப்பட்டு வருகிறது. முதலில் முன்கள பணியாளர்களுக்கான டாக்டர்கள், நர்சுகள், சுகாதார பணியாளர்களுக்கு செலுத்தப்பட்டது.
இதன் பின்னர் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. திருப்பூர் மாவட்டத்தில் முதலில் தடுப்பூசி செலுத்த பொதுமக்கள் தயக்கம் காட்டி வந்தனர். இதன் பின்னர் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டதும் பலரும் முன்வந்து தடுப்பூசி செலுத்த தொடங்கினர். லட்சக்கணக்கான தொழிலாளர்கள் திருப்பூரில் இருந்து வருவதால் தேவைக்கு ஏற்ப தடுப்பூசியும் சென்னையில் இருந்து பெறப்பட்டு வருகிறது. கடந்த 9 மாதத்தில் திருப்பூர் மாவட்டத்தில் 20 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
20 லட்சம் பேருக்கு
இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது
திருப்பூர் மாவட்டத்தில் தடுப்பூசி அனைவருக்கும் கிடைக்கும் வகையில் பகுதிவாரியாகவும், சுழற்சி முறையிலும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டது. இதுதவிர 5 மெகா தடுப்பூசி முகாம்களும் நடத்தப்பட்டது. இதனால் மாவட்டம் முழுவதும் நேற்று முன்தின நிலவரப்படி இதுவரை 9 மாதத்தில் 20 லட்சத்து 64 ஆயிரத்து 309 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் முதல் டோஸ் செலுத்தியவர்கள் 15 லட்சத்து 95 ஆயிரத்து 385 பேரும், 2-வது டோஸ் செலுத்தியவர்கள் 4 லட்சத்து 68 ஆயிரத்து 924 பேரும் அடங்குவர். ஆண்கள் 10 லட்சத்து 77 ஆயிரத்து 329 பேர். பெண்கள் 9 லட்சத்து 86 ஆயிரத்து 637 பேர். கோவிஷீல்டு செலுத்தியவர்கள் 18 லட்சத்து 66 ஆயிரத்து 18 பேர். கோவேக்சின் செலுத்தியவர்கள் 1 லட்சத்து 95 ஆயிரத்து 158 பேர். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 2 லட்சத்து 85 ஆயிரத்து 519 பேர். 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் 5 லட்சத்து 34 ஆயிரத்து 185 பேர். 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் 12 லட்சத்து 44 ஆயிரத்து 605 பேர். மாவட்டம் முழுவதும் நேற்று தடுப்பூசி போடப்பட்டது. இந்த அறிக்கையும் சேர்க்கப்பட்டு பின்னர் அறிவிக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
-----
Related Tags :
Next Story