வெள்ளி கவசம் கொள்ளையடித்த 2 பேர் கைது
அமராவதிபாளையம் அருகே மாகாளியம்மன் கோவிலில் வெள்ளி கவசம் கொள்ளையடித்த 2பேரை போலீசார் கைது
நல்லூர்,
அமராவதிபாளையம் அருகே மாகாளியம்மன் கோவிலில் வெள்ளி கவசம் கொள்ளையடித்த 2பேரை போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
கோவிலில் கொள்ளை
திருப்பூர, அமராவதிபாளையம் அருகே மாகாளியாமன் கோவில் உள்ளது. அந்த கோவில் கடந்த 8 வருடமாக மணிராஜ் என்பவர் பூசாரியாக இருந்து வருகிறார். இவர் கடந்த 3-ந் தேதி மாலை பூஜை முடித்து வீட்டுக்கு சென்றார். பின்னர் மறுநாள் கோவிலை சுத்தம் செய்ய அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் காலையில் கோவிலுக்கு வந்துள்ளார்.
அப்போது கோவில் கதவு உடைக்கப்பட்டு கதவு திறந்த கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் கோவில் பூசாரிக்கு தெரிவித்தார். உடனே கோவில் பூசாமி கோவிலுக்கு வந்துபார்த்தபோது, கோவில் கருவரை பீரோ உடைக்கப்பட்டு திறந்து கிடந்துது.
கொள்ளை
அதில் இருந்த உற்சவர் விநாயகர் வெள்ளி கிரீடம் ½ கிலோ, மாகாளியம்மன் வெள்ளி கிரீடம் ½ கிலோ, முருகன் சிலையில் உள்ள வெள்ளி பாசம் 1 கிலோ, மூலவர் விநாயகர் வெள்ளி கவசம் 3 கிலோ, என மொத்தம் 6 கிலோ, 3 கிராம் தங்கம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. அது குறித்து நல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட ஆசாமிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. அந் தனிப்படை போலீசார் கொள்ளையர்களை தேடி வந்தனர்.
2 பேர் கைது
இந்த கொள்ளையில் திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தாலுகா பள்ளப்பட்டி பகுதியை சேர்ந்த தேவேந்திரன் (வயது 50), இவருடைய நண்பர் அதே பகுதியை சேர்ந்த விருமாண்டி (52) என்பதும் தெரியவந்தது.
இவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவர்களிடம் 6 கிலோ வெள்ளி, 3 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
கொள்ளையடித்தது எப்படி?
தேவேந்திரன் கடந்த 10 ஆண்டுக்கு முன்பு திருப்பூர் செரங்காடு, கடுகுகாரர் தோட்டம் பகுதியிலும், கோபி செட்டிபாளையம், டி.என்.பாளையத்திலும் வசித்து வந்துள்ளார். இவரது மூத்த மகள் கூலிபாளையம் அருகே வசிப்பதால் அவரை பார்க்க வருவதும் அருகில் கோவிகளை நோட்டமிட்டு கொள்ளையில் ஈடுபட்டுள்ளார். . இவர் மீது நம்பியூர், சேவூர், நல்லூர் உள்ளிட்ட போலீஸ் நிலையத்தில் திருட்டு வழக்கு உள்ளது. மேலும் இவரது கூட்டாளியான விருமாண்டி மீது ஈரோடு மாவட்டம், நம்பியூர், தேனி மாவட்டம் தேவதானப்பட்டி, ஜெயமங்கலம், பெரியகுளம் திருப்பூர் அவினாசிபாளையம், பல்லடம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் கோவில் மற்றும் வீடுகளில் திருட்டு வழக்கு உள்ளது தெரியவந்தது. இவர்கள் இருவரும் பல்வேறு வழக்குகளில் சிறைக்கு சென்று நீதி மன்றத்தில் ஆஜராகாமல் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு தேடப்பட்டு வந்தவர்கள் குறிப்பிட்ட தக்கது.
இவர்கள் இருவரும் சேர்ந்து அமராவதி பாளையத்தில் உள்ள மாகாளியம்மன் கோவில் கதவை உடைத்து வெள்ளி கவசத்தை கொள்ளையடித்து சென்றதாக ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.
-------
கைது செய்யப்பட்ட தேவேந்திரன், விருமாண்டி
Related Tags :
Next Story