மாவட்ட செய்திகள்

கோவில்பட்டி கடலைமிட்டாய்க்கு அஞ்சல் கவர் வெளியிடப்பட்டது + "||" + post cover issue for kovilpatti peanut butter

கோவில்பட்டி கடலைமிட்டாய்க்கு அஞ்சல் கவர் வெளியிடப்பட்டது

கோவில்பட்டி கடலைமிட்டாய்க்கு அஞ்சல் கவர் வெளியிடப்பட்டது
கோவில்பட்டி கடலைமிட்டாய்க்கு அஞ்சல் கவர் வெளியிடப்பட்டது
கோவில்பட்டி:
கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு நேற்று சிறப்பு அஞ்சல் கவரை முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் திவ்யா சந்திரன் வெளியிட்டார்.
சிறப்பு அஞ்சல் கவர்
புவிசார் குறியீடு பெற்றுள்ள கோவில்பட்டி கடலை மிட்டாய்கான சிறப்பு அஞ்சல் கவர் இந்திய அஞ்சல் துறையால் நேற்று வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் திவ்யா சந்திரன் தலைமை தாங்கி, சிறப்பு அஞ்சல் கவரை வெளியிட்டாா்.
விழாவில் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் கள் வசந்தா சிந்து தேதி, சீதாலட்சுமி, பரமேஸ்வரன், ஆய்வாளர்கள் மகேஸ்வர ராஜா, கேத்ர பாலன், விற்பனைப் பிரதிநிதி சங்கரேஸ்வரி, கோவில்பட்டி தொழில் வர்த்தக சங்க தலைவர் ஏ.பி.கே. பழனி செல்வம், கடலை மிட்டாய் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்க தலைவர் கார்த்தீஸ்வரன், செயலாளர் கண்ணன், பொருளாளர் தினேஷ் ரோடி, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மண்டலத் தலைவர் எம். ராதாகிருஷ்ணன், வடக்கு மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம் மற்றும் சங்க நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டார்கள்.
சுவைமிக்க கடலைமிட்டாய்
நிகழ்ச்சியில் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் திவ்யா சந்திரன் பேசும்போது கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நிலக்கடலை மானாவாரியில் பயிரிடப்படுகிறது. இதன் சுவை கரிசல் மண்ணுக்கே உரித்தான மகிமை. கரிசல் மண்ணில் விளைந்த கடலையும், தேனியின் வெல்லமும், தாமிரபரணி தண்ணீரும், கடலை மிட்டாய் தயார் செய்ய பயன்படுத்தப்படும் விறகு அடுப்பும் இதன் சுவையின் தனிச்சிறப்பு. மண்ணுக்கு பெருமை சேர்த்த சுவையும் மணமும், ஆரோக்கியமும் கொண்ட கோவில்பட்டி கடலை மிட்டாய் அனைத்து வயதினரும் விரும்பி உண்கின்றனர். பாரம்பரிய பெருமை வாய்ந்த பனை வெல்லம் வைத்து தயாரிக்கப்பட்ட கடலைமிட்டாய் ஆனது அனைத்து விழாக்களிலும் பயன்படுத்தப் படுகிறது. நூற்றாண்டு பாரம்பரியமிக்க கோவில்பட்டி கடலை மிட்டாய் புவிசார் குறியீடு பெற்றதை போற்றும் வகையில் கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு சிறப்பு அஞ்சல் கவரை இந்திய அஞ்சல் துறை வெளியிட்டுள்ளது தனி சிறப்பாகும் என்று பேசினார்.