தூத்துக்குடியில் தொழிலாளியிடம் செல்போன் பறித்த வாலிபர் கைது
தூத்துக்குடியில் தொழிலாளியிடம் செல்போன் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்
தூத்துக்குடி:
தூத்துக்குடி கே.வி.கே.சாமி நகரை சேர்ந்தவர் மிக்கேல்ராஜ் (வயது 38). டைல்ஸ் ஒட்டும் தொழில் செய்து வருகிறார். இவர் மாப்பிள்ளையூரணி ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த பழையகாயல் அகரத்தை சேர்ந்த பாஸ்கர் (22), அசாருதின், ராஜேஷ் ஆகிய 3 பேரும் சேர்ந்து மிக்கேல்ராஜை வழிமறித்து கத்தியை காட்டி செல்போன் மற்றும் ரூ.500 பறித்துக் கொண்டு தப்பி ஓடி உள்ளனர். அப்போது, தவறி விழுந்த பாஸ்கர் மட்டும் பிடிபட்டார்.
இது குறித்து சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து பாஸ்கரை கைது செய்து விசாரணை நடத்தினர்.
Related Tags :
Next Story