தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 13 Oct 2021 4:14 PM GMT (Updated: 13 Oct 2021 4:14 PM GMT)

நாகை, மயிலாடுதுறை, காரைக்கால், திருவாரூர் பகுதிகளில் உள்ள குறைகள் புகார் பெட்டியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடிகாலை ஆக்கிரமித்த ஆகாயத்தாமரைகள்
காரைக்கால் நகரில் நூலாற்று வடிகால் உள்ளது. தற்போது இந்த வடிகாலை ஆகாயத்தாமரைகள் ஆக்கிரமித்துள்ளன. இதனால் தண்ணீர் செல்ல வழியின்றி காணப்படுகிறது. மேலும் மழைக்காலங்களில் தண்ணீர் வடிய வழியில்லாத நிலை உள்ளது. வடிகாலின் கரையோரம் செடி,கொடிகள் படர்ந்து புதர்மண்டி காணப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வடிகாலை ஆக்கிரமித்துள்ள ஆகாயதாமரைகளை அகற்றி சீரமைக்கவேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
-பாலிஜாஸ்மின், காரைக்கால்.
சாய்ந்த நிலையில் மின்கம்பம்
தரங்கம்பாடி தாலுகா திருக்களாச்சேரி ஊராட்சி கொன்னகாவலி செல்லும் பிரதான சாலை உள்ளது. இந்த சாலையின் ஓரத்தில் உள்ள ஒரு மின்கம்பம் சாய்ந்த நிலையில் ஆபத்தாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் மக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பத்தை சீரமைத்து தர நடிவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி ெபாதுமக்களின் எதிர்பார்ப்பாகும். 
-பொதுமக்கள், திருக்களாச்சேரி. 
குண்டும், குழியுமான சாலை 
திருவாரூர் மாவட்டம் வலங்கைமானை அடுத்த விழத்தூர் கீழத்தெரு பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள சாலை குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். மேலும், சாலையில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து கரடு, முரடாக கிடக்கிறது. இதன் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் சாலையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்களின் நலன் கருதி விழத்தூர் கீழத்தெருவில் உள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என்பதே அந்த பகுதி மக்களின் எதிர்பார்ப்பாகும்.
-பொதுமக்கள், விழத்தூர்.
சென்னைக்கு பஸ் வசதி வேண்டும்
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் பகுதி ஏராளமான அரசு அலுவலகங்கள், அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் கொண்ட பகுதியாகும். ஆனால் இந்த பகுதியில் இருந்து சென்னைக்கு செல்ல போதிய பஸ் வசதியில்லை. இதனால் பயணிகள் சென்னைக்கு செல்ல அருகில் உள்ள பஸ் நிலையங்களுக்கு சென்று பஸ் ஏறி செல்ல வேண்டியது உள்ளது. இதனால் பயணிகள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மயிலாடுதுறை பணிமனையில் இருந்து சென்னைக்கு செல்லும் பஸ்களை செம்பனார்கோவில் வரை நீட்டித்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்களின் எதிர்பார்்ப்பாகும். 
-பொதுமக்கள், செம்பனார்கோவில்.



Next Story