மாவட்ட செய்திகள்

உத்தமபாளையம் அருகே கொதிக்கும் எண்ணெய்யை கணவர் மீது ஊற்றிய பெண் + "||" + The woman who poured boiling oil on her husband

உத்தமபாளையம் அருகே கொதிக்கும் எண்ணெய்யை கணவர் மீது ஊற்றிய பெண்

உத்தமபாளையம் அருகே கொதிக்கும் எண்ணெய்யை கணவர் மீது ஊற்றிய பெண்
உத்தமபாளையம் அருகே குடும்ப பிரச்சினையில் கொதிக்கும் எண்ணெய்யை கணவர் மீது ஊற்றிய பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.
உத்தமபாளையம்:
உத்தமபாளையம் அருகே உள்ள க.புதுப்பட்டி சாஸ்தா கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 57). கூலித்தொழிலாளி. இவரது மனைவி சித்ரா. கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வந்தது. 
இந்தநிலையில் நேற்று ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த சித்ரா, கொதிக்கும் எண்ணெய்யை எடுத்து கணவர் என்று பார்க்காமல் முருகன் மீது ஊற்றினார். இதில் அவரது உடல் வெந்தது. இதனால் வலி தாங்க முடியாமல் அவர் அபயகுரல் எழுப்பினார். 
இதையடுத்து அங்கு வந்த அக்கம்பக்கத்தினர், படுகாயம் அடைந்த முருகனை மீட்டு சிகிச்சைக்காக உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து உத்தமபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.