மாவட்ட செய்திகள்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்9 ஊராட்சி ஒன்றியங்களையும் தி மு க கைப்பற்றியதுவெற்றிபெற்றவர்கள் பெயர் விவரம் + "||" + In Kallakurichi district The Front captured all 9 panchayat unions Winners Name Description

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்9 ஊராட்சி ஒன்றியங்களையும் தி மு க கைப்பற்றியதுவெற்றிபெற்றவர்கள் பெயர் விவரம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்9 ஊராட்சி ஒன்றியங்களையும் தி மு க கைப்பற்றியதுவெற்றிபெற்றவர்கள் பெயர் விவரம்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் 9 ஊராட்சி ஒன்றியங்களையும் தி.மு.க.வே கைப்பற்றியது. வெற்றிபெற்ற வேட்பாளர்களின் பெயர் விவரம் தெரியவந்துள்ளது

கள்ளக்குறிச்சி

754 பேர் போட்டி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 2 கட்டங்களாக நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தோ்தலில் மொத்தமுள்ள 9 ஊராட்சி ஒன்றியங்களில் 180 ஒன்றிய வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் தியாகதுருகம் ஒன்றியத்தில் 2 வார்டுகளிலும், கள்ளக்குறிச்சி ஒன்றியத்தில் ஒரு வார்டிலும் வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இதையடுத்து மீதமுள்ள 177 ஒன்றிய வார்டு கவுன்சிலர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில் 754 பேர் போட்டியிட்டனர்.
இதில் 9 ஊராட்சி ஒன்றியங்களையும் தி.மு.க.வே கைப்பற்றியது. வெற்றிபெற்ற வேட்பாளர்களின் பெயர் விவரம் வருமாறு:- 

கள்ளக்குறிச்சி ஒன்றியம்

கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தமுள்ள 23 ஊராட்சி ஒன்றிய வார்டுகளில் தி.மு.க. 18 இடங்களிலும், அ.தி.மு.க., சுயேச்சை தலா 2 இடங்களிலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒரு இடத்திலும் வெற்றிபெற்றன. 
இதில் 1-வது வார்டு நீலமேகம்(அ.தி.மு.க), 2-வது வார்டு கரிகாலன்(தி.மு.க), 3-வது வார்டு ஆனந்தி(தி.மு.க), 4-வது வார்டு அன்பழகன்(தி.மு.க), 5-வது வார்டு ரவிக்குமார்(தி.மு.க), 6-வது வார்டு பிரியா(தி.மு.க), 7-வது வார்டு பூங்கலியன் (தி.மு.க), 8-வது வார்டு க.சுமதி(சுயச்சை), 9-வது வார்டு அபிராமி(அ.தி.மு.க), 10-வது வார்டு கல்யாணி(தி.மு.க), 12-வது வார்டு லலிதா அரவிந்தன்(தி.மு.க), 13-வது வார்டு விமலாமுருகன்(தி.மு.க), 14-வது வார்டு செல்வராஜ்(தி.மு.க), 15-வார்டு ராஜீவ்காந்தி(வி.சி.க.), 16-வது வார்டு ராதிகா(தி.மு.க), 17-வது வார்டு தனம்(தி.மு.க), 18-வது வார்டு மணி(தி.மு.க) 19-வது வார்டு சுகன்யா(தி.மு.க), 20-வது வார்டு ரூபா முரளி(சுயேச்சை), 21-வது வார்டு தேவராஜன்(தி.மு.க), 22-வது வார்டு கண்ணம்மாள்(தி.மு.க), 23-வது வார்டு மணிவேல் (தி.மு.க.) ஆகியோர் வெற்றிபெற்றனர்.

ரிஷிவந்தியம் ஒன்றியம்

ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தமுள்ள 25 ஒன்றிய வார்டுகளில் 21 இடங்களில் தி.மு.க., 3 இடங்களில் அ.தி.மு.க., ஒரு இடத்தில் சுயேட்சையும் வெற்றிபெற்றது. 
இதில் 1-வது வார்டு உமா மகேஸ்வரி(தி.மு.க)., 2-வது வார்டு இளங்கோ (தி.மு.க)., 3-வது வார்டு ராஜேஸ்வரி(தி.மு.க)., 4-வது வார்டு பரிமளா(தி.மு.க)., 5-வது வார்டு அஞ்சலை(தி.மு.க)., 6-வது வார்டு சாந்தி(அ.தி.மு.க)., 7-வது வார்டு இயேசுரட்சகர்(தி.மு.க)., 8-வது வார்டு சென்னம்மாள்(தி.மு.க)., 9-வது வார்டு பன்னீர்செல்வம்(தி.மு.க)., 10-வது வார்டு அஞ்சலி(தி.மு.க)., 11-வது வார்டு சுசீலா (தி.மு.க)., 12-வது வார்டு மணிகண்டன்(அ.தி.மு.க)., 13-வது வார்டு குமார் (சுயச்சை) 14-வது வார்டு சங்கீதா(தி.மு.க)., 15-வது வார்டு உஷா(தி.மு.க)., 16-வது வார்டு கண்ணியம்மாள்(தி.மு.க)., 17-வது வார்டு ஜீவரேகா(தி.மு.க)., 18-வது வார்டு சீனுவாசன்(தி.மு.க)., 19-வது வார்டு செல்வி(அ.தி.மு.க)., 20-வது வார்டு முனியம்மாள்(தி.மு.க)., 21-வது வார்டு ஆனந்தராஜ்(தி.மு.க)., 22-வது வார்டு சுசிலா(தி.மு.க)., 23-வது வார்டு கெங்காசலம்(தி.மு.க)., 24-வது வார்டு வடிவுக்கரசி(தி.மு.க)., 25-வது வார்டு சோலையம்மாள்(தி.மு.க). ஆகியோர் வெற்றி பெற்றனர். இதில் 9-வது வார்டில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் பன்னீர்செல்வம் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

சின்னசேலம் ஒன்றியம்

21 வார்டுகளை கொண்ட சின்னசேலம் ஒன்றியத்தில் தி.மு.க. 17 இடங்களிலும், அ.தி.மு.க. 3 இடங்களிலும், காங்கிரஸ் ஒரு இடத்திலும் வெற்றிபெற்றது. 
இதில் 1-வது வார்டு அன்புமணி மாறன்(தி.மு.க.), 2-வது வார்டு தமிழ்மணி (தி.மு.க.), 3-வது வார்டு ராஜேஸ்வரி(தி.மு.க.), 4-வது வார்டு மலர்கொடி(தி.மு.க.), 5-வது வார்டு வடிவேல்(அ.தி.மு.க.), 6-வது வார்டு சீதாபாமா (தி.மு.க.), 7-வது வார்டு வேல்முருகன் (காங்கிரஸ்), 8-வது வார்டு திவ்யபாரதி (தி.மு.க.), 9-வது வார்டு நந்தினி(தி.மு.க.), 10-வது வார்டு ராஜசேகர்(அ.தி.மு.க.), 11-வது வார்டு சுதா (தி.மு.க.), 12-வது வார்டு பிருந்தாதேவி (தி.மு.க.), 13-வது வார்டு சத்தியமூர்த்தி (தி.மு.க.), 14-ஆவது வார்டு தெய்வானை(தி.மு.க.), 15-வது வார்டு கோவிந்தராஜ் (தி.மு.க.),  16-வது வார்டு அருண்குமார்(அ.தி.மு.க.), 17-வது வார்டு தேன்மொழி (தி.மு.க.), 18-வது வார்டு சித்ரா(தி.மு.க.), 19-வது வார்டு நதியா(தி.மு.க.), 20-வது வார்டு தனலட்சுமி(தி.மு.க.), 21-வது வார்டு பெரியசாமி(தி.மு.க.) ஆகியோர் வெற்றி பெற்றனர். 

சங்கராபுரம் ஒன்றியம்

சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியதில் மொத்தமுள்ள 24 வார்டுகளில் 21 இடங்களில் தி.மு.க.வும், அ.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மற்றும் சுயேச்சை தலா ஒரு இடத்திலும் வெற்றிபெற்றது.
இதில் 1-வது வார்டு பீர்முகமது(சுயேச்சை), 2-வது வார்டு அஞ்சலை(தி.மு.க), 3-வது வார்டு தமிழரசி(தி.மு.க), 4-வது வார்டு செல்வி(தி.மு.க), 5-வது வார்டு விமலா(தி.மு.க), 6-வது வார்டு அபுபக்கர்(தி.மு.க), 7-வது வார்டு சரிதா(தி.மு.க), 8-வது வார்டு சுப்பிரமணியன்(தி.மு.க), 9-வது வார்டு ரீனா(தி.மு.க), 10-வது வார்டு பரிமளா(தி.மு.க), 11-வது வார்டு சசிகுமார்(மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி), 12-வது வார்டு தெய்வானை(தி.மு.க), 13-வது வார்டு சரோஜா(அ.தி.மு.க), 14-வது வார்டு சாந்தி(தி.மு.க), 15-வது வார்டு ராஜா(தி.மு.க), 16-வது வார்டு அம்பிகா(தி.மு.க), 17-வது வார்டு பொன்னி(தி.மு.க), 18-வது வார்டு குமாரி(தி.மு.க), 19-வது வார்டு திலகவதி(தி.மு.க), 20-வது வார்டு தனவேல்(தி.மு.க), 21-வது வார்டு கொளஞ்சி(தி.மு.க), 22-வது வார்டு ஆரோக்கிய மார்ஷல்(தி.மு.க), 23-வது வார்டு நிஷாந்தி(தி.மு.க), 24-வது வார்டு பூங்கொடி(தி.மு.க) ஆகியோர் வெற்றி பெற்றனர்.

கல்வராயன்மலை ஒன்றியம்

கல்வராயன்மலை ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தமுள்ள 7 வார்டுகளிலும் தி.மு.க.வே வெற்றிபெற்றது. இதில் 1-வது வார்டு செல்வராஜ், 2-வது வார்டு மலர், 3-வது வார்டு பாஷாபி, 4-வது வார்டு மின்னல்கொடி, 5-வது வார்டு பார்வதி அண்ணாமலை, 6-வது வார்டு சந்திரன், 7-வது வார்டு செல்லதுரை ஆகியோர் வெற்றிபெற்றனர்.

உளுந்தூர்பேட்டை ஒன்றியம்

உளுந்தூர்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தமுள்ள 21 வார்டுகளில் தி.மு.க. 15 இடங்களிலும், அ.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், பா.ம.க. ஆகியவை தலா ஒரு இடத்திலும், சுயேச்சை 3 இடங்களிலும் வெற்றிபெற்றன.
இதில் 1-வது வார்டு கணேசன்(தி.மு.க.), 2-வது வார்டு ராஜவேல்(தி.மு.க.), 3-வது வார்டு அலெக்சாண்டர்(தி.மு.க.), 4-வது வார்டு தங்கமணி(அ.தி.மு.க.), 5-வது வார்டு ஏழுமலை(சுயேச்சை), 6-வது வார்டு நடையம்மை(தி.மு.க.), 7-வது வார்டு இளங்கோவன்(தி.மு.க.), 8-வது வார்டு சந்திரலேகா(தி.மு.க.), 9-வது வார்டு ஆரோக்கிய ஜெனிபர்(சுயேச்சை), 10-வது வார்டு பழனிவேல்(தி.மு.க.), 11-வது வார்டு சிவசங்கரி(பா.ம.க.), 12-வது வார்டு அஞ்சலை(தி.மு.க.), 13-வது வார்டு பர்வின்(சுயேச்சை), 14-வது வார்டு ராதா(தி.மு.க.), 15-வது வார்டு ரஜினி(வி.சி.க.), 16-வது வார்டு உமாராணி(தி.மு.க.), 17-வது வார்டு விமலா(தி.மு.க.), 18-வது வார்டு சக்ரவர்த்தி(தி.மு.க.), 19-வது வார்டு லட்சுமி(தி.மு.க.), 20-வது வார்டு ஜெயக்குமார்(தி.மு.க.), 21-வது வார்டு சந்திரா(தி.மு.க.) ஆகியோர் வெற்றிப் பெற்றனர்.

திருநாவலூர் ஒன்றியம்

திருநாவலூர் ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தமுள்ள 20 வார்டுகளில் தி.மு.க. 13 இடங்களிலும், அ.தி.மு.க. மற்றும் சுயேச்சை தலா 2 இடங்களிலும், விடுதலை சிறுத்தை, ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகள் தலா ஒரு இடத்திலும் வெற்றிபெற்றன. இதில் 1-வது வார்டு ஆனந்தாயி(தி.மு.க.), 2-வது வார்டு மாலதி(தி.மு.க.), 3-வது வார்டு வேல்முருகன்(அ.தி.மு.க.), 4-வது வார்டு சசிகலா(தி.மு.க.), 5-வது வார்டு அலமேலு(மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு), 6-வது வார்டு முருகன்(அ.தி.மு.க.), 7-வது வார்டு சரண்யா(தி.மு.க.), 8-வது வார்டு வெங்கடேசன்(தி.மு.க.), 9-வது வார்டு இந்திராணி(ம.தி.மு.க.), 10-வது வார்டு காமராஜ்(தி.மு.க.), 11-வது வார்டு சாந்தி (தி.மு.க.), 12-வது வார்டு விஜயா(தி.மு.க.), 13-வது வார்டு பாரதி(தி.மு.க.), 14-வது வார்டு ராமலிங்கம்(தி.மு.க.), 15-வது வார்டு மாயாவதி(தி.மு.க.), 16-வது வார்டு காமாட்சி(வி.சி.க.), 17-வது வார்டு கனிமொழி(தி.மு.க.), 18-வது வார்டு மணிகண்டன்(சுயேச்சை), 19-வது வார்டு செல்வராசு(சுயேச்சை), 20-வது வார்டு முருகன்(தி.மு.க.) ஆகியோர் வெற்றி பெற்றனர்.

தியாகதுருகம் ஒன்றியம்

16 வார்டுகளை கொண்ட தியாகதுருகம் ஒன்றியத்தில் தி.மு.க 14 இடங்களிலும், அ.தி.மு.க 2 இடங்களிலும் வெற்றிபெற்றன.  இதில் 1-வது வார்டு தனலட்சுமி (தி.மு.க), 2-வது வார்டு சண்முகம்(தி.மு.க), 3-வது வார்டு தமிழரசி(தி.மு.க), 4-வது வார்டு நெடுஞ்செழியன்(தி.மு.க.), 5-வது வார்டு செந்தில்(தி.மு.க.), 6-வது வார்டு கொளஞ்சி(தி.மு.க.), 7-வது வார்டு தாமோதரன்(தி.மு.க.), 8-வது வார்டு அமிர்தவல்லி(தி.மு.க.), 9-வது வார்டு அய்யாசாமி(தி.மு.க.), 10-வது வார்டு வளர்மதி(அ.தி.மு.க.), 11-வது வார்டு பச்ைசயம்மாள்(தி.மு.க.), 12-வது வார்டு பிச்சையம்மாள்(தி.மு.க.), 13-வது வார்டு செல்லம்மாள்(தி.மு.க.), 14-வது வார்டு பழனியம்மாள்(அ.தி.மு.க.), 15-வது வார்டு முத்துக்குமார் (தி.மு.க.), 16-வது வார்டு தேவி (தி.மு.க.) ஆகியோர் வெற்றி பெற்றனர்.

திருக்கோவிலூர் ஒன்றியம்

திருக்கோவிலூர் ஒன்றியத்தில் மொத்தமுள்ள 23 வார்டுகளில் தி.மு.க. 20 இடங்களிலும், அ.தி.மு.க. 2 இடங்களிலும், சுயேச்சை ஒரு இடத்திலும் வெற்றிபெற்றது.
இதில் 1-வது வார்டு அலமேலு(தி.மு.க.), 2-வது வார்டு சுகவனராஜன்(தி.மு.க.), 3-வது வார்டு பார்த்தசாரதி(தி.மு.க.), 4-வது வார்டு சாந்தியா(தி.மு.க.), 5-வது வார்டு பாண்டியன்(அ.தி.மு.க.), 6-வது வார்டு சரஸ்வதி(தி.மு.க.), 7-வது வார்டு அஞ்சலாட்சி(தி.மு.க.), 8-வது வார்டு தணிகாசலம்(தி.மு.க.), 9-வது வார்டு சுமதி(தி.மு.க.), 10-வது வார்டு பூங்கோல்(அ.தி.மு.க.), 11-வது வார்டு ஜெயபிரகலாதன்(தி.மு.க.), 12-வது வார்டு சரளா(தி.மு.க.), 13-வது வார்டு அருள்மொழிவர்மன்(தி.மு.க.), 14-வது வார்டு குமாரி(தி.மு.க.), 15-வது வார்டு ஞானாம்பாள்(சுயேச்சை), 16-வது வார்டு மல்லிகா(தி.மு.க.), 17-வது வார்டு சண்முகம்(தி.மு.க.), 18-வது வார்டு ஞானவேல்(தி.மு.க.), 19-வது வார்டு அபிராமி(தி.மு.க.), 20-வது வார்டு பூங்காவனம்(தி.மு.க.), 21-வது வார்டு பழனியம்மாள்(தி.மு.க.), 22-வது வார்டு தனம்(தி.மு.க.), 23-வது வார்டு முத்துலிங்கம்(தி.மு.க.) ஆகியோர் வெற்றிபெற்றனர்.