திருவண்ணாமலை மாவட்டத்தில் 18 தாசில்தார்கள் பணியிட மாற்றம்


திருவண்ணாமலை மாவட்டத்தில் 18 தாசில்தார்கள் பணியிட மாற்றம்
x
தினத்தந்தி 13 Oct 2021 5:11 PM GMT (Updated: 13 Oct 2021 5:11 PM GMT)

திருவண்ணாமலை மாவட்டத்தில் 18 தாசில்தார்களை பணியிட மாற்றம் செய்து கலெக்டர் முருகேஷ் உத்தரவிட்டு உள்ளார்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் 18 தாசில்தார்களை  பணியிட மாற்றம் செய்து கலெக்டர் முருகேஷ் உத்தரவிட்டு உள்ளார்.

 தாசில்தார்கள்

திருவண்ணாமலை தாசில்தார் மூர்த்தி ஆரணி உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளராகவும், அங்கு பணியாற்றிய வெங்கடேசன் போளூர் தாலுகா ஆதிதிராவிடர் நல தாசில்தாராகவும், சென்னை-சேலம் தேசிய நெடுஞ்சாலை நிலஎடுப்பு சேத்துப்பட்டு தாசில்தார் முரளி, திருவண்ணாமலை மாவட்ட வழங்கல் பறக்கும் படை தாசில்தாராகவும், அங்கு பணியாற்றிய சக்கரை கீழ்பென்னாத்தூர் தாசில்தாராகவும், அங்கு பணியாற்றிய வைதேகி தேசிய நெடுஞ்சாலை 179-பி செய்யாறு தாசில்தாராகவும், அங்கு பணியாற்றிய தமிழ்மணி செய்யாறு உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

பணியிட மாற்றம்

செய்யாறு உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளராக பணியாற்றிய சத்தியன் வெம்பாக்கம் தாசில்தாராகவும், அங்கு பணியாற்றிய குமாரவேலு சேத்துப்பட்டு சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராகவும், அங்கு பணியாற்றிய ஹரிதாஸ் சென்னை-சேலம் தேசிய நெடுஞ்சாலை சேத்துப்பட்டு நிலஎடுப்பு தாசில்தாராகவும், தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம் (என்.எச்.-66) திருவண்ணாமலை தாசில்தார் முனுசாமி செங்கம் தாசில்தாராகவும், அங்கு பணியாற்றிய மனோகரன் ஜமுனாமரத்தூர் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராகவும், அங்கு பணியாற்றிய மனோகரன் கலசபாக்கம் வட்ட வழங்கல் தாசில்தாராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

கலசபாக்கம் வட்ட வழங்கல் தாசில்தார் ராஜராஜேஸ்வரி அகதிகள் தாசில்தாராகவும், அங்கு பணியாற்றிய கே.சுமதி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம் (என்.எச்.-66) திருவண்ணாமலை நிலஎடுப்பு தாசில்தாராகவும், வந்தவாசி ஆதிதிராவிடர் நல தாசில்தார் முருகானந்தம் வந்தவாசி தாசில்தாராகவும், அங்கு பணியாற்றிய திருநாவுக்கரசு வந்தவாசி ஆதிதிராவிடர் நல தாசில்தாராகவும், செய்யாறு தாசில்தார் திருமலை செய்யாறு சிப்காட் விரிவாக்க திட்ட அலுவலக தாசில்தாராகவும், அங்கு பணியாற்றிய ஜி.சுமதி செய்யாறு தாசில்தாராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கான உத்தரவை திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் பிறப்பித்துள்ளார்.

Next Story