சிறுமி பாலியல் பலாத்காரம்
செய்யாறு அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளி போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
செய்யாறு
திருவண்ணாமலை மாவட்டம் தூசி கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி அருள் (வயது 45). சம்பவத்தன்று இவா் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த மனநலம் பாதிக்கப்பட்ட 13 வயது மதிக்கத்தக்க ஒரு சிறுமியை ஆசை வார்த்தைகளை கூறி வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இதை வெளியே சொன்னால் கொன்று விடுவேன் என அவர் சிறுமியை மிரட்டியதாக தெரிகிறது. இதனால் சிறுமி யாரிடமும் தெரிவிக்காமல் இருந்தார்.
இந்தநிலையில் கடந்த சில நாட்களாக சிறுமி உடல் நலப் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தாள். தனது உடல் நலப் பாதிப்புக்கு அருள் தான் காரணம் எனப் பெற்றோரிடம் தெரிவித்தாள். அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாயார் செய்யாறு அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.
இன்ஸ்பெக்டர் நந்தினிதேவி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இதுதொடர்பாக போக்சோ சட்டத்தில் அருள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
Related Tags :
Next Story