கள்ளக்குறிச்சி மாவட்ட ஊராட்சியை தி.மு.க. கைப்பற்றியது 19 வார்டுகளிலும் வெற்றிவாகை சூடியது


கள்ளக்குறிச்சி  மாவட்ட ஊராட்சியை தி.மு.க. கைப்பற்றியது 19 வார்டுகளிலும் வெற்றிவாகை சூடியது
x
தினத்தந்தி 13 Oct 2021 10:49 PM IST (Updated: 13 Oct 2021 10:49 PM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சி வார்டு கவுன்சிலர் பதவிக்கான தேர்தலில் மொத்தமுள்ள 19 வார்டுகளிலும் தி மு க அமோகமாக வெற்றிபெற்றது

கள்ளக்குறிச்சி

மாவட்ட ஊராட்சி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 9 ஊராட்சி ஒன்றியங்களில் மொத்தம் 19 மாவட்ட ஊராட்சி வார்டு கவுன்சிலர் பதவிகள் உள்ளன. நடந்து முடிந்த தேர்தலில் மொத்தமுள்ள 19 வார்டுகளில் ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் உள்ள மாவட்ட ஊராட்சி 5-வது வார்டு, தியாகதுருகம் ஒன்றியத்தில் 13-வது வார்டு ஆகிய 2 வார்டுகளில் வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மீதமுள்ள 17 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் 115 பேர் போட்டியிட்டனர். 
இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் ஆரம்ப சுற்று முதலே அனைத்து வார்டுகளிலும் தி.மு.க. வேட்பாளர்களே முன்னிலையில் இருந்தனர். விடிய விடிய நடைபெற்ற இந்த வாக்கு எண்ணிக்கை நேற்று அதிகாலையில் முடிவடைந்தது. 

வேட்பாளர்கள் பெயர் விவரம்

இதில் மொத்தமுள்ள 19 மாவட்ட ஊராட்சி வார்டுகளிலும் தி.மு.க.வேட்பாளர்களே வெற்றிபெற்றனர். இவர்களின் பெயர் விவரம் வருமாறு:-
1-வது வார்டு அஸ்வினி, 2-வது வார்டு சுகன்யா, 3-வது வார்டு அமிர்தம், 4-வது வார்டு ராஜேந்திரன், 5-வது வார்டு கோவிந்தராஜ், 6-வது வார்டு ஜெய்சங்கர், 7-வது வார்டு தங்கம், 8-வது வார்டு அகிலாபானு, 9-வது வார்டு முருகேசன், 10-வது வார்டு அலமேலு, 11-வது வார்டு வேல்முருகன், 12-வது வார்டு கலையரசி, 13-வது வார்டு புவனேஸ்வரி, 14-வது வார்டு பழனியம்மாள், 15-வது வார்டு ராஜராஜேஸ்வரி, 16-வது வார்டு பிரியா, 17-வது வார்டு அமுதா, 18-வது வார்டு சுந்தரமூர்த்தி, 19-வது வார்டு ஜி.ஆர்.வசந்தவேல். 


Next Story