திருப்பத்தூர் மாவட்ட ஊராட்சிக்குழு 13 வார்டுகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி


திருப்பத்தூர்  மாவட்ட ஊராட்சிக்குழு 13 வார்டுகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி
x
தினத்தந்தி 13 Oct 2021 11:07 PM IST (Updated: 13 Oct 2021 11:07 PM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூர் மாவட்ட ஊராட்சிக்குழு 13 வார்டுகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்ட ஊராட்சிக்குழு 13 வார்டுகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.

மாவட்ட ஊராட்சி

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 13 மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பதவிகளுக்கு நடந்த உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. 11 இடங்களிலும், கூட்டணி கட்சியான காங்கிரஸ் ஒரு இடத்திலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒரு இடத்தில் தி.மு.க. சின்னத்திலும் போட்டியிட்டன. பதிவான வாக்குகள் நேற்று முன்தினம் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது.

இதில் மொத்தமுள்ள 13 வார்டுகளிலும் தி.மு.க. கூட்டணியே வெற்றிபெற்றுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

12 இடங்களில் தி.மு.க.

1-வது வார்டு சரிதா முத்துக்குமரன், 3-வது வார்டு பிரியதர்ஷினி ஞானவேலன், 4-வது வார்டு சத்தியவாணி, 5-வது வார்டு சு.ஜெயா, 6-வது வார்டு சிந்துஜா, 7-வது வார்டு பி.எம்.முனிவேல், 8-வது வார்டு சுபாஷ் சந்திரபோஸ் (விடுதலை சிறுத்தைகள்), 9-வது வார்டு கவிதா தண்டபாணி, 10-வது வார்டு சூரியகுமார், 11-வது வார்டு சி.கே.சுப்பிரமணி, 12-வது வார்டு குணேசேகரன், 13-வது வார்டு கே.சத்தியவாணி.
2-வது வார்டில் காங்கிரஸ் வேட்பாளர் சசிகலா வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் மாவட்டத்தில் உள்ள 13 இடங்களிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்று, மாவட்ட ஊராட்சியை தி.மு.க. கைப்பற்றி உள்ளது.

Next Story