வேலூர் மாவட்ட கவுன்சிலர் வார்டுகள் அனைத்திலும் தி.மு.க. வெற்றி
வேலூர் மாவட்டத்தில் அனைத்து மாவட்ட கவுன்சிலர் வார்டுகளிலும் தி.மு.க. கைப்பற்றியது. இதன் மூலம் தி.மு.க.வை சேர்ந்தவர் மாவட்ட ஊராட்சி குழு தலைவராக உள்ளார்.
வேலூர்
வேலூர் மாவட்டத்தில் அனைத்து மாவட்ட கவுன்சிலர் வார்டுகளிலும் தி.மு.க. கைப்பற்றியது. இதன் மூலம் தி.மு.க.வை சேர்ந்தவர் மாவட்ட ஊராட்சி குழு தலைவராக உள்ளார்.
உள்ளாட்சி தேர்தல்
வேலூர் மாவட்டத்தில் அணைக்கட்டு, கணியம்பாடி, கே.வி.குப்பம், காட்பாடி, பேரணாம்பட்டு, குடியாத்தம், வேலூர் ஆகிய 7 ஊராட்சி ஒன்றியங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் முதல் கட்டமாக கடந்த 6-ந் தேதியும், 2-ம் கட்டமாக 9-ந் தேதியும் நடந்தது.
அதற்கான வாக்கு எண்ணிக்கை நேற்று முன்தினம் காலை முதல் நேற்று அதிகாலை வரை 7 மையங்களில் நடந்தது.
வேலூர் மாவட்டத்தில் 14 மாவட்ட கவுன்சிலர் பதவிகளும், 138 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளும், 247 ஊராட்சி மன்றத் தலைவர்களும், 2,079 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளும் என மொத்தம் 2,428 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.
இந்த நிலையில், வேலூரில் உள்ள 7 ஒன்றியங்களுக்கான வாக்கு எண்ணிக்கையானது அந்தந்த ஒன்றியங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரி, பள்ளிகளில் நடைபெற்றது.
அணைக்கட்டு ஒன்றியத்திலும், கே.வி.குப்பம் ஒன்றியத்திலும் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது. அதிகாரிகளுக்கும் இடையே வேட்பாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதேபோன்று சில இடங்களில் அ.தி.மு.க.வினருக்கும் இடையே தி.மு.க.வினருக்கும் இடையே சிறு மோதல்கள் ஏற்பட்டன.
மாவட்ட கவுன்சிலர் இடங்கள்
வேலூர் மாவட்டத்தில் உள்ள 7 ஒன்றியங்களில் நடந்த வாக்கு எண்ணிக்கையில் 14 மாவட்ட கவுன்சிலர் பதவியை தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சியும் சேர்ந்து மொத்தமாக கைப்பற்றியது. அதாவது தி.மு.க. 13 இடங்களையும், அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் 1 இடத்தையும் கைப்பற்றியது.
ஒன்றிய கவுன்சிலர் பதவியை பொறுத்தவரையில், 138 ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் தி.மு.க. 102 இடங்களிலும், அ.தி.மு.க. 20 இடங்களிலும், பா.ம.க. 7 இடங்களிலும், சுயச்சை 6 இடங்களிலும், காங்கிரஸ் 2 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்டு கட்சி 1 இடத்திலும் வெற்றி பெற்றது.
Related Tags :
Next Story