மிருகண்டா அணை முழு கொள்ளளவை எட்டியது


மிருகண்டா அணை முழு கொள்ளளவை எட்டியது
x
தினத்தந்தி 13 Oct 2021 11:16 PM IST (Updated: 13 Oct 2021 11:16 PM IST)
t-max-icont-min-icon

தொடர் மழை காரணமாக மிருகண்டா அணை முழு கொள்ளளவை எட்டியது.

கலசபாக்கம்

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கத்தை அடுத்த ஜவ்வாதுமலை பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் ஜவ்வாதுமலை அடிவாரத்தில் கட்டப்பட்டுள்ள மிருகண்டா அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

இதனால் அணையின் பாதுகாப்பு கருதி அணையை பொதுப்பணித்துறை உதவி செயற் பொறியாளர் செல்வராஜ் முன்னிலையில் தி.மு.க. எம்.எல்.ஏ. சரவணன் திறந்து வைத்தார். விநாடிக்கு 600 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகின்றன.

மேலும் நவாப்பாளையம் பெரிய ஏரிக்கு செல்லும் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு நேற்று முன்தினம் இரவு பெய்த கன மழையின் காரணமாக காட்டாற்று வெள்ளத்தால் கால்வாய் உடைந்து தண்ணீர் வெளியேறி வழிந்து சென்றதில் 30 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெல் பயிர்கள் சேதமடைந்து. 

இதனையடுத்து பாதிப்பு ஏற்பட்ட இடங்களை சரவணன் எம்.எல்.ஏ. நேரில் சென்று பார்வையிட்டு கால்வாய்களில் ஏற்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளிடம் கூறினார்.

அப்போது ஒன்றியக்குழு தலைவர் அன்பரசிராஜசேகரன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சுப்பிரமணியன் உட்பட பலர் உடனிருந்தனர்.

கலசபாக்கம் செய்யாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றன. இதனால் கலசபாக்கத்தை அடுத்த ஆணைவாடி செய்யாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணையில் தண்ணீர் நிரம்பி வழிந்து ஓடுகின்றது. 

இதனால் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Next Story