மாவட்ட செய்திகள்

உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. தில்லுமுல்லு செய்து வென்றது + "||" + DMK in local elections Thillumullu did and won

உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. தில்லுமுல்லு செய்து வென்றது

உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. தில்லுமுல்லு செய்து வென்றது
உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. தில்லுமுல்லு செய்து வென்றது என்று முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் குற்றம்சாட்டினார்.
திண்டுக்கல்: 


தி.மு.க. தில்லுமுல்லு 
அ.தி.மு.க. பொன்விழா கொண்டாட்டம் தொடர்பாக திண்டுக்கல் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், திண்டுக்கல்லில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட அவைத்தலைவர் சங்கரநாராயணன் தலைமை தாங்கினார். இதில் முன்னாள் அமைச்சரும், மேற்கு மாவட்ட செயலாளருமான திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார்.
அப்போது அவர் பேசுகையில், உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. தில்லுமுல்லு செய்து வெற்றிபெற்று இருக்கிறது. பல இடங்களில் வாக்கு எண்ணும் மையத்துக்குள் அ.தி.மு.க.வினரை கூட விடவில்லை. எனவே அதை நாம் தோல்வியாக கருதக்கூடாது. தமிழகத்தில் 30 ஆண்டுகள் ஆட்சி செய்த இயக்கம் அ.தி.மு.க. தான். கொரோனா முடிந்ததும் பொதுக்கூட்டங்கள் நடத்தி மக்களுக்கு உண்மைகளை தெரிவிக்க வேண்டும். மக்களை திரட்டி புரட்சியை ஏற்படுத்த வேண்டும். அ.தி.மு.க.வில் அனைவருக்கும் சமஉரிமை உள்ளது. தொடக்கத்தில் இருந்தே அ.தி.மு.க.வில் இருப்பவர்கள் கவுரவிக்கப்பட உள்ளனர். அ.தி.மு.க. பொன்விழாவை பண்டிகை போன்று கொண்டாட வேண்டும், என்றார்.

நிர்வாகிகள் 
இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. பொன்விழாவை அனைத்து கிளைகளிலும் கொடியேற்றி, நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. இதில் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் மருதராஜ், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் ராஜ்மோகன், அபிராமி கூட்டுறவு சங்க தலைவர் பாரதிமுருகன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தென்னம்பட்டி பழனிசாமி, பரமசிவம், பி.கே.டி.நடராஜன், ஒன்றிய செயலாளர் ராஜசேகரன், பகுதி செயலாளர்கள் மோகன், சுப்பிரமணி, சேசு, முரளிதரன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.