மாவட்ட செய்திகள்

கருகப்பூலாம்பட்டியில்விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் + "||" + Demonstration by agricultural workers' unions

கருகப்பூலாம்பட்டியில்விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கருகப்பூலாம்பட்டியில்விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
பொன்னமராவதி:
பொன்னமராவதி ஒன்றியம், தேனூர் ஊராட்சி கருகம்பூலாம்பட்டியில் விவசாய சங்கம், விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் பிரதாப்சிங் தலைமையில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் வேலை செய்யும் பெண்களை மிகவும் கேவலமாகவும், அவர்கள் வேலை செய்யவில்லை என்றும் பேசியதற்கு இடது சாரிகள் மிகக் கடுமையாக நடத்திய போராட்டத்திற்கு பின் மன்மோகன்சிங் ஆட்சியில் கொண்டு வரப்பட்டது இத்திட்டம். இதனால் ஏழை, எளிய குடும்பங்களும் வாழ்வாதாரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் இத்திட்டத்தை மிகவும் கேவலமாக பேசியுள்ள நாம் தமிழர் கட்சியினுடைய பொறுப்பாளருமாகிய சீமானை மிகவும் வன்மையாக கண்டிப்பதோடு, நாவடக்கமும், வாயடக்கமும் தேவை என்பதை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷம் எழுப்பினர். இதில் மாவட்டத்தலைவர் ராசு, செல்வம், இந்திய கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர், வெள்ளக்கண்ணு, இளைஞர் பெரும் மன்றம் சார்பாக நாகலிங்கம், மாதர் சங்கம் சார்பாக பஞ்சவர்ணம், தேவி, பார்வதி, பெரியாத்தாள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

தொடர்புடைய செய்திகள்

1. தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
நெல்லையில் தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
2. மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
அம்பையில் மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
3. மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
4. பணியை புறக்கணித்து ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
பணியை புறக்கணித்து ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
5. ஆர்ப்பாட்டம்
மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.