பேரணாம்பட்டு பகுதி ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் வீதிகளில் பெருக்கெடுத்த தண்ணீர்
பலத்த மழையால் ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பேரணாம்பட்டு நகருக்குள் தண்ணீர் புகுந்தது. மேலும் தடுப்பணை அருகே கரை உடைந்ததால் தோப்புகளுக்குள் தண்ணீர் புகுந்து தென்னை மரங்கள் அடித்து செல்லப்பட்டன.
பேரணாம்பட்டு
பலத்த மழையால் ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பேரணாம்பட்டு நகருக்குள் தண்ணீர் புகுந்தது. மேலும் தடுப்பணை அருகே கரை உடைந்ததால் தோப்புகளுக்குள் தண்ணீர் புகுந்து தென்னை மரங்கள் அடித்து செல்லப்பட்டன.
ஆறுகளில் வெள்ளப்பெருக்கு
பேரணாம்பட்டு மற்றும் சுற்றப் புற பகுதிகளில் கடந்த 3 தினங்களாக இடி, மின்னலுடன் தொடர் மழை பெய்து வருகிறது. நேற்று காலை 8 மணி வரை ஒரே நாளில் 82.5 மில்லி மீட்டர் அளவு மழை பதிவாகியுள்ளது.
மேலும் பேரணாம்பட்டை ஒட்டியுள்ள ஆந்திர வனப்பகுதிகள் மற்றும் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் ரங்கம் பேட்டை கானாறு, பத்தலப்பல்லி மலட்டாறு, மதினாப் பல்லி மலட்டாறு ஆகியவற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
பேரணாம்பட்டு அருகே உள்ள பாலூர் கிராமத்தில் 4 மதகுகளுடன் தடுப்பணை கட்டப்பட்டுள்ளது.
வெள்ளப்பெருக்கால் மதகு பகுதிகளையொட்டி 30 அடி நீளத்திற்கு கரையில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக தடுப்பணை பகுதியிலிருந்து வெளியேறியள வெள்ளம் அருகில் உள்ள வயல்களுக்குள் புகுந்ததால் பயிர்ககள் தண்ணீரில் மூழ்கி வருகிறது.
அங்குள்ள பார்த்தீபன் என்பவருக்கு சொந்தமான தென்னை தோப்புகளிலிருந்த 30-க்கு மேற்பட்ட தென்னை மரங்கள் சாய்ந்து வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. தகவலறிந்த பொதுப்பணித் துறை உதவி பொறியாளர் தமிழ்செல்வன் மற்றும் பொதுப்பணித் துறை அலுவலர்கள் தடுப்பணை உடைந்த பகுதியை பார்வையிட்டனர். விரைந்து வந்து பார்வையிட்டனர்.
அங்குள்ள பார்த்தீபன் என்பவருக்கு சொந்தமான தென்னை தோப்புகளிலிருந்த 30-க்கு மேற்பட்ட தென்னை மரங்கள் சாய்ந்து வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. தகவலறிந்த பொதுப்பணித் துறை உதவி பொறியாளர் தமிழ்செல்வன் மற்றும் பொதுப்பணித் துறை அலுவலர்கள் தடுப்பணை உடைந்த பகுதியை பார்வையிட்டனர். விரைந்து வந்து பார்வையிட்டனர்.
அப்போது விவசாய நிலப்பகுதிகளில் வெள்ள நீர் புகுவதை தடுக்க தடுப்பணை மதகுகளை திறந்து தண்ணீரை வெளியேற்ற முயனறனர். ஆனால் 2 மதகுகளை திறக்க முடியவில்லை இதனால் அதிகாரிகள் தவித்து நின்றனர்.
பின்னர் மலையையொட்டி கல்லாங்குத்து பகுதியில் உள்ள இதர 2 மதகுகளை திறந்து ஓங்குப்பம் கிராம வனப்பகுதிக்குள் தண்ணீரை வெளியேற்றினர். அப்போது அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தடுப்பணை மதகுகள் போதிய பராமரிப்பு இல்லை என்றும், கரைகள் சேதமடைந்து வெள்ள நீர் வெளியேறியதால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் கரைகளை பலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
வீடுகளுக்குள் தண்ணீர்
ரங்கம்பேட்டை கானாற்று வெள்ளப்பெருக்கினால் பேரணாம்பட்டு நகரில் உள்ள புதுவீதி, குல்ஜார் வீதி, லால் மஜித் வீதி, டீப்புஸா வீதி, சின்ன மஜித் வீதி, முல்லா வீதி, தோப்பு வீதி, தாஹீர் வீதி, நல்ல தண்ணீர் கிணறு விதி, படேல் வீதி, இனாம் தார் வீதி, ஆயக்கார வீதி, சுடுகாடு பகுதி ஆகிய தாழ்வான பகுதிகளில் சுமார் 3 அடி உயரத்திற்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஆற்றின் கரையோர பகுதிகளிலுள்ள வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது.
இதனால் மக்கள் நள்ளிரவு இரவு முதல் அதிகாலை வரை தூங்க முடியாமல் தவித்தனர்.
தகவலறிந்த பேரணாம்பட்டு நகராட்சி ஆணையாளர் சசிகலா, முன்னாள் நகராட்சி தலைவர் ஆலியார் ஜூபேர் அஹம்மத் ஆகியோர் பார்வையிட்டனர். நகராட்சி ஆணையாளரிடம் பொதுமக்கள் போர்க்கால அடிப்படையில் கானாறு செல்லும் பகுதிகளில் தூர் வாரி கரைகளை பலப்படுத்தி பாதுகாப்பு வழங்கும் மாறு கோரிக்கை விடுத்தனர்.
இரும்பு தடுப்புகள்
ரெட்டி மாங்குப்பம் தரை பாலத்தில் தண்ணீர் கரை புரண்டோடி செல்கிறது. வெள்ளம் வடியாததால் ஆற்றை கடந்து செல்லாதவாறு இருபுறமும் இரும்பு தடுப்புகள் வைத்து போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டன. நேற்று காலை முதல் தொடர்ந்து பேரணாம்பட்டு ஆம்பூர், மேல் பட்டி குடியாத்தம் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.
அதன் காரணமாக மாற்று்பாதையில் அதாவது மேல்பட்டி, உள்ளி வழியாக வழியாக ஆம்பூருக்கு பஸ்கள் இயக்கப்பட்டன. இதனால் பொதுமக்கள், தொழிலாளர்கள் மிகவும் அவதிப்பட்டனர்.
Related Tags :
Next Story