ஆற்காட்டில் 3 டிப்பர் லாரிகள் பறிமுதல்
ஆற்காட்டில் 3 டிப்பர் லாரிகள் பறிமுதல்
ஆற்காடு
ஆற்காட்டில் உள்ள செய்யாறு கூட்டு ரோடு பகுதியில் வருவாய்த்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்து கொண்டிருந்த 3 டிப்பர் லாரிகளை அதிகாரிகள் நிறுத்தி சோதனை செய்தனர்.
சோதனையில் ஆற்காடு அருகே பாலமதி பகுதியிலிருந்து அனுமதியின்றி 3 டிப்பர் லாரிகளில் மண் ஏற்றி கொண்டு வந்தது தெரியவந்தது. மேலும் இதுகுறித்து ஆற்காடு டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் 3 டிப்பர் லாரிகளை பறிமுதல் செய்தனர். மேலும் அதனை ஓட்டி வந்த வாலாஜா பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி (வயது 61), சென்னசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த பூபதி (48) நாராயணபுரம் பகுதியைச் சேர்ந்த வினோத்குமார் (23) ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story