மாவட்ட செய்திகள்

ஆயுத பூஜையை முன்னிட்டு பூஜை பொருட்கள் விற்பனை மும்முரம் + "||" + Busy selling sales items

ஆயுத பூஜையை முன்னிட்டு பூஜை பொருட்கள் விற்பனை மும்முரம்

ஆயுத பூஜையை முன்னிட்டு பூஜை பொருட்கள் விற்பனை மும்முரம்
கிருஷ்ணகிரியில் ஆயுத பூஜையை முன்னிட்டு பூஜை பொருட்களின் விற்பனை மும்முரமாக நடந்தது.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரியில் ஆயுத பூஜையை முன்னிட்டு பூஜை பொருட்களின் விற்பனை மும்முரமாக நடந்தது.
ஆயுத பூஜை
இன்று (வியாழக்கிழமை) ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு கிருஷ்ணகிரியில் நேற்று காலை முதல் பூஜை பொருட்கள் விற்பனை அதிகமாக இருந்தது. கடை வீதியில் வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு, தேங்காய், சாம்பல் பூசணிக்காய், பொரி, பழங்கள், பூக்கள், விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது. இதை வாங்குவதற்காக ஏராளமான பொதுமக்கள் கடை வீதிகளில் திரண்டனர்.
பொதுமக்கள் திரண்டனர்
மேலும் வர்த்தக நிறுவனங்கள், கடைகளை அழகுப்படுத்த வைக்கப்படும் கலர் பேப்பர்கள், பிளாஸ்டிக் தோரணங்கள் விற்பனையும் ஜோராக இருந்தது.
கிருஷ்ணகிரி பெங்களூரு சாலை, சென்னை சாலை, 5 ரோடு ரவுண்டானா, சப்-ஜெயில் சாலை, சேலம் சாலையில் பொருட்களை வாங்க பொதுமக்கள் திரண்டனர். இதனால் அந்த பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.