மாவட்ட செய்திகள்

பிரபல ரவுடி கொலை வழக்கில் மேலும் 2 பேர் கைது + "||" + rowdy murder case

பிரபல ரவுடி கொலை வழக்கில் மேலும் 2 பேர் கைது

பிரபல ரவுடி கொலை வழக்கில் மேலும் 2 பேர் கைது
லாலாபேட்டை அருகே பிரபல ரவுடி கொலை வழக்கில் மேலும் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
லாலாபேட்டை,
பிரபல ரவுடி வெட்டிக்கொலை
கரூர் மாவட்டம் லாலாபேட்டையை அடுத்த கருப்பத்தூரை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது 52). பிரபல ரவுடியான இவர் கடந்த 6-ந் தேதி அதிகாலையில் தனது தோட்டத்திற்கு சென்றபோது மர்ம ஆசாமிகளால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து குளித்தலை போலீஸ் துணை சூப்பிரண்டு ஸ்ரீதர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்றது. பின்னர் கோபாலகிருஷ்ணனை கொலை செய்ததாக 7 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ளவர்களை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.
மேலும் 2 பேர் கைது
இந்தநிலையில் கோபாலகிருஷ்ணன் கொலை வழக்கில் தொடர்புடைய 2 பேரை கரூர் ரவுண்டானா அருகே நேற்று மதியம் 12.30 மணியளவில் போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
விசாரணையில் அவர்கள் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த குமுளி ராஜ்குமார் (41), இசக்கி குமார் (49) என்பது தெரியவந்தது. அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.