மாவட்ட செய்திகள்

அண்டக்குளம் அருகேதண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து 2½ வயது குழந்தை பலி + "||" + The water slipped into the tank 20-year-old child killed

அண்டக்குளம் அருகேதண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து 2½ வயது குழந்தை பலி

அண்டக்குளம் அருகேதண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து 2½ வயது குழந்தை பலி
அண்டக்குளம் அருகே தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து 2½ வயது குழந்தை பரிதாபமாக இறந்தது.
கீரனூர்
குழந்தை பலி
புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அருகே அண்டக்குளத்தை அடுத்த புதுக்குடியான்பட்டியை சேர்ந்தவர்கள் குமாரசாமி-சுசீலா தம்பதியின் மகள்  குணவதி (2½ வயது). நேற்று முன்தினம் மாலை வீட்டின் பின்புறம் தண்ணீர் தொட்டிக்குள் அருகே குணவதி விளையாடி கொண்டிருந்தாள். இதையடுத்து அங்கு விளையாடி கொண்டிருந்த குழந்தை எதிர்பாராதவிதமாக தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்ததில் மூச்சுத்திணறி கிடந்தாள். இதைப்பார்த்த அவரது பெற்றோர் குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக அண்டக்குளம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு வந்தனர். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே குழந்தை இறந்துவிட்டதாக கூறினார். இதுகுறித்து அறிந்த உடையாளிப்பட்டி போலீசார் குழந்தையை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. வாகனம் மோதி புள்ளிமான் சாவு
வாகனம் மோதி புள்ளிமான் சாவு
2. விபத்தில் முதியவர் சாவு
விபத்தில் முதியவர் சாவு
3. மணமேல்குடி அருகே பழுதாகி நின்றிருந்த டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலி
மணமேல்குடி அருகே பழுதாகி நின்றிருந்த டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
4. மணமேல்குடி அருகே டீக்கடைக்குள் புகுந்த லாரி மோதி முதியவர் பலி
டீக்கடைக்குள் புகுந்த லாரி மோதி முதியவர் பலியானார்.
5. விபத்தில் நிதி நிறுவன மேலாளர் பலி
விபத்தில் நிதி நிறுவன மேலாளர் பலி