மாவட்ட செய்திகள்

வியாபாரி மனைவியிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு + "||" + GOld chain flush with the dealers wife

வியாபாரி மனைவியிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு

வியாபாரி மனைவியிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு
பழனியில் வீட்டு வாசலில் கோலம் போட்டு கொண்டிருந்த வியாபாரி மனைவியிடம் 5 பவுன் சங்கிலியை மர்ம நபர் பறித்து சென்றார்.
பழனி: 

பழனி பழைய போஸ்ட் ஆபீஸ் ரோடு பகுதியை சேர்ந்தவர் காளிதாஸ். அந்த பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி உமாமகேஸ்வரி (வயது 40). இவர் நேற்று காலை வீட்டு முன்பு வாசல் தெளித்து கோலம் போட்டுக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியே நடந்து வந்த மர்ம நபர் திடீரென உமாமகேஸ்வரி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் சங்கிலியை பறித்தார். இதையடுத்து உமாமகேஸ்வரி திருடன், திருடன் என கூச்சல் போட்டார். 

அக்கம்பக்கத்தினர் வருவதற்குள் மர்ம நபர் மின்னல் வேகத்தில் தப்பி ஓடி விட்டார். இதுகுறித்து பழனி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

தொடர்புடைய செய்திகள்

1. சாத்தனூர்; ஊராட்சி மன்ற தலைவரின் மனைவியிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு
சாத்தனூர் அருகே மொபட்டில் சென்ற ஊராட்சி மன்ற தலைவரின் மனைவியிடம் 5 பவுன் சங்கிலியை 2 பேர் பறித்து சென்றனர்.