மாவட்ட செய்திகள்

சாலை விபத்தில் வாலிபர் பலி + "||" + A youth was killed in a road accident

சாலை விபத்தில் வாலிபர் பலி

சாலை விபத்தில் வாலிபர் பலி
சாலை விபத்தில் வாலிபர் பலியானார்
பெரம்பலூர்
கடலூர் மாவட்டம், திட்டக்குடி தாலுகா, கூடலூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பூமாலை. இவரது மகன் சக்தி (வயது 29). இவர் நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம் தண்ணீர்பந்தல் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த வாகனம் ஒன்று சக்தி ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் படுகாயமடைந்த சக்தி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுதொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற வாகனம் எது?, அதனை ஓட்டிச் சென்றவர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. சாலை விபத்தில் வாலிபர் பலி
சாலை விபத்தில் வாலிபர் உயிரிழந்தார். அவரது நண்பர்கள் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.