மாவட்ட செய்திகள்

போக்சோ வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது + "||" + The thuggery law was passed on Valipar

போக்சோ வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

போக்சோ வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
பெரம்பலூர்
பெரம்பலூர் அருகே திருப்பெயர் மேற்கு தெருவை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் சக்திவேல் (வயது 28). இவரை பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இதையடுத்து சக்திவேலை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி, கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதனை ஏற்ற கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா, சக்திவேலை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவு நகலை போலீசார் திருச்சி மத்திய சிறையில் உள்ள சக்திவேலிடம் வழங்கினர்.

தொடர்புடைய செய்திகள்

1. வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்
2. வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
குற்றசம்பவங்களில் ஈடுபட்ட வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.