மாட்டின் மீது மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி பலி
மாட்டின் மீது மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி பலியானார்
குன்னம்
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள சிறுகுடல் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 55). விவசாயி. இவர், மோட்டார் சைக்கிளில் வாலிகண்டபுரம் சென்றுவிட்டு மீண்டும் சிறுகுடல் நோக்கி வந்து கொண்டிருந்தார். கோழிப்பண்ணை அருகே வந்துபோது திடீரென ரோட்டின் குறுக்கே மாடு ஒன்று வந்தது. அப்போது அந்த மாட்டின் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் செல்வராஜ் படுகாயம் அடைந்தார். தகவலறிந்த உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து செல்வராஜ் மனைவி மூக்காயி கொடுத்த புகாரின்பேரில், மருவத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story