பூக்கள் விலை கிடுகிடு உயர்வு
ஆயுதபூஜை பண்டிகையையொட்டி பூக்கள் விலை கிடுகிடுவென உயர்ந்தது.
நெல்லை:
ஆயுதபூஜை பண்டிகையையொட்டி பூக்கள் விலை கிடுகிடுவென உயர்ந்தது.
ஆயுதபூஜை
நவராத்திரி விழாவையொட்டி கடந்த ஒரு வாரமாக பக்தர்கள் விரதம் இருந்து பூஜை செய்து வருகிறார்கள். பலர் தங்களது வீடுகளில் கொலு வைத்து வழிபாடு நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் நவராத்திரியின் சிகர நிகழ்ச்சியான ஆயுதபூஜை மற்றும் சரஸ்வதி பூஜை இன்று (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி பூஜை பொருட்கள் வாங்குவதற்கு நேற்று கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. நெல்லை டவுன் கடை வீதிகள், சந்திப்பு, தச்சநல்லூர், பாளையங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைவீதிகளில் பொதுமக்கள் பூஜை பொருட்களை வாங்கி சென்றனர். அவல், பொரி, கடலை, சந்தனம், குங்குமம், சர்க்கரை பொங்கலுக்கு தேவையான பொருட்களை வாங்கிச் சென்றனர். மேலும் மாலைகள், பூக்கள் ஆகியவற்றையும் வாங்கினார்கள்.
பூக்கள் விலை உயர்வு
இதையொட்டி நெல்லையில் நேற்று பூக்கள் விலையும் கிடுகிடுவென உயர்ந்தது. நெல்லை சந்திப்பில் உள்ள பூ மார்க்கெட்டுக்கு ஏராளமான வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் குவிந்தனர்.
இதனால் மல்லிகைப்பூ விலை 1 கிலோவுக்கு ரூ.800 முதல் ரூ.1,000 வரையும், பிச்சிப்பூ ரூ.800 முதல் ரூ.1,000 வரையும் விற்பனையானது.
இதேபோல் கனகாம்பரம் ரூ.1,000-க்கு மேல் விற்பனை செய்யப்பட்டது. இதுதவிர ரோஸ், செவ்வந்தி, சம்பங்கி கோழிக்கொண்டை, அரளி உள்ளிட்ட பூக்களும் நேற்று விலை உயர்ந்தது.
Related Tags :
Next Story