கொடுத்த கடனை திருப்பி கேட்டவரை தாக்கியவர் கைது


கொடுத்த கடனை திருப்பி கேட்டவரை தாக்கியவர் கைது
x
தினத்தந்தி 14 Oct 2021 1:14 AM IST (Updated: 14 Oct 2021 1:14 AM IST)
t-max-icont-min-icon

கொடுத்த கடனை திருப்பி கேட்டவரை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்

தா.பழூர்
அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள கோட்டியால் கிராமத்தை சேர்ந்தவர் கருணாநிதி (வயது 58). இவர், அதே ஊரை சேர்ந்த நடராஜன் (50) என்பவருக்கு ரூ.200 கடனாக கொடுத்துள்ளார். சம்பவத்தன்று கருணாநிதி, நடராஜனிடம் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டபோது அவர் திருப்பி தர மறுத்ததுடன் கருணாநிதியை தகாத வார்த்தைகளால் திட்டி கையில் வைத்திருந்த பீர் பாட்டிலால் தலையில் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதில், காயமடைந்த கருணாநிதி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுகுறித்து தா.பழூர் போலீசில் கருணாநிதி கொடுத்த புகாரின்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து நடராஜனை கைது செய்தார்.

Next Story