காரில் வைத்திருந்த ரூ.3.20 லட்சம் திருட்டு


காரில் வைத்திருந்த ரூ.3.20 லட்சம் திருட்டு
x
தினத்தந்தி 14 Oct 2021 1:19 AM IST (Updated: 14 Oct 2021 1:19 AM IST)
t-max-icont-min-icon

ேப்பந்தட்டையில் காரில் வைத்திருந்த ரூ.3.20 லட்சம் திருட்டு போனது.

வேப்பந்தட்டை
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள நூத்தப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி (வயது 48). ஒப்பந்ததாரர். இவர் வேப்பந்தட்டையிலுள்ள வங்கி ஒன்றில் இருந்து ரூ.3 லட்சத்து 20 ஆயிரத்தை எடுத்துக் கொண்டு தனது காரில் நெற்குணம், வி.களத்தூர் ஆகிய ஊர்களுக்கு சென்றுவிட்டு அங்கிருந்து மீண்டும் வேப்பந்தட்டை வந்தார்.
பின்னர் அவர், வேப்பந்தட்டை பஸ் நிறுத்தம் அருகே காரை நிறுத்திவிட்டு டீ குடிப்பதற்காக அங்குள்ள கடைக்கு சென்றுள்ளார். பின்னர் வந்து பார்த்தபோது காரில் வைத்திருந்த ரூ.3 லட்சத்து 20 ஆயிரம் திருட்டு போய் இருந்தது கண்டு திடுக்கிட்டார். இதுகுறித்து பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணியிடம், ஆரோக்கியசாமி புகார் அளித்தார். அவரது உத்தரவின்பேரில், அரும்பாவூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story