மாவட்ட செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி + "||" + Daily Telegraph Complaint Box

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டி
வடிகால் வசதி வேண்டும்
நாகர்கோவில், சைமன்நகர் பகுதியில் சாலையில் வடிகால் வசதி  இல்லை. இதனால், மழைக்காலங்களில் தண்ணீர் குளம் போல் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப் படுகிறார்கள். எனவே, சாலையில் தண்ணீர் தேங்காதவாறு வடிகால் வசதி செய்ய வேண்டும்.
                        -ஸ்ரீராம், ஆசாரிபள்ளம்.

பஸ் வசதி வேண்டும்
வல்லங்குமரன்விளை பாலத்தில் இருந்து சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் வரை சரக்கல்விளை, கீழசரக்கல்விளை, வேதநகர் போன்ற பகுதிகளுக்கு பஸ் வசதி இல்லை. இந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் பல கிலோ மீட்டர் தூரம் நடந்து வல்லங்குமரன்விளை, கன்னங்குளம், இருளப்பபுரம் போன்ற ஊர்களுக்கு சென்று பஸ் ஏறும் நிலை உள்ளது. எனவே, இந்த பகுதியில் பஸ் வசதி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                     -சிவகுமார், கீழசரக்கல்விளை.
 
சாலையை சீரமைக்க வேண்டும்
பனச்சமூட்டில் இருந்து இடைக்கோடு வழியாக மார்த்தாண்டம் செல்லும் சாலையில் தினமும் ஏராளமான அரசு மற்றும் தனியார் வாகனங்கள் செல்கின்றன. இங்கு இடைக்கோடு பகுதியில் சாலை மிகவும் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால், இந்த வழியாக செல்லும் இருசக்கர வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றன. எனவே, சேதமடைந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
                       -டோண், இடைக்கோடு.
தெருவிளக்கு எரியவில்லை
அறுகுவிளை தெற்கு தெரு வார்டு எண் 7 -ல் பல மாதங்களாக தெருவிளக்கு எரியவில்லை. மேலும் அந்த பகுதியில் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இதனால், இரவு நேரங்களில் அந்த வழியாக செல்லும் பலர் கீழே விழுந்து பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெருவிளக்கு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 
               -செல்வ சரவணன், அறுகுவிளை. 

சீரமைக்க வேண்டிய சாலை
குழித்துறை தபால் நிலையம் சந்திப்பில் இருந்து கோர்ட்டு செல்லும் சாலையில் தார் பெயர்ந்து பள்ளமாக மாறி வருகிறது. இதனால், இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் நிலை தடுமாறி விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
                              -ஷிபு, குழித்துறை.
வடிகால் ஓடை அமைக்கப்படுமா? 
தோவாளை, வடக்கூர் பிள்ளையார் கோவில் தெருவில் இதுவரை வடிகால் ஓடை வசதி இல்லை. மழைக்காலங்களில் மழைநீருடன் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரும் கலந்து ேதங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே, அந்த பகுதியில் வடிகால் ஓடை அமைக்க வேண்டும் என ேகாரிக்கை எழுந்துள்ளது. 
                      -குமாரவேல், தோவாளை.

சாலை சீரமைக்கப்படுமா?
இரவிபுதூர்கடையில் இருந்து பயணம் செல்லும் சாலை சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகிறார்கள். குறிப்பாக இருசக்கர வாகனங்களில் செல்கிறவர்கள் அடிக்கடி விபத்தில் சிக்குகிறார்கள். எனவே, சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட  அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
                                               -ஞானப்பிரகாசம், பொற்றைவிளை.

குப்பைகளால் சுகாதார சீர்கேடு
புலியூர்குறிச்சி, தென்கரை தோப்பூர் சாலையோரம் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால், அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சாலைேயாரம் குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                  -பெனர்ஜி, தென்கரை தோப்பு.
தொடர்புடைய செய்திகள்

1. தினத்தந்தி புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 8939278888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
2. தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டி
3. தினத்தந்தி புகார் பெட்டி
'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
4. தினத்தந்தி புகார் பெட்டி
'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
5. தினத்தந்தி புகார் பெட்டி
'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-