நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் உண்டியல் வருமானம் ரூ29 லட்சம்
நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் நேற்று உண்டியல் திறக்கப்பட்டது. அதில் பக்தர்கள் செலுத்திய சுமார் ரூ 29 லட்சம் வருமானம் கிடைத்தாக அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
நாமக்கல்:
நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் நேற்று உண்டியல் திறக்கப்பட்டது. அதில் பக்தர்கள் செலுத்திய சுமார் ரூ.29 லட்சம் வருமானமாக கிடைத்தாக அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
உண்டியல் திறப்பு
நாமக்கல் நகரில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒரே கல்லினால் ஆன 18 அடி உயர ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்த கோவில் வளாகத்தில் பக்தர்கள் காணிக்கை செலுத்த வசதியாக உண்டியல்கள் வைக்கப்பட்டு உள்ளன.
இவை 3 மாதங்களுக்கு ஒருமுறை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில் திறக்கப்பட்டு எண்ணப்படும். அந்த வகையில் கோவில் செயல் அலுவலர் ரமேஷ், உதவி ஆணையாளர் தமிழரசு, ஈரோடு உதவி ஆணையாளர் அன்னக்கொடி, ஆய்வாளர் சுந்தர் ஆகியோர் முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டு, அதில் உள்ள காணிக்கை பக்தர்கள் மூலம் எண்ணப்பட்டன.
ரூ.29 லட்சம் காணிக்கை
அந்த உண்டியலில் ரூ.28 லட்சத்து 92 ஆயிரத்து 819 ரொக்கம் இருந்ததாக அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதேபோல் நரசிம்மசாமி கோவில் உண்டியலில் ரூ.2 லட்சத்து ஆயிரத்து 647 ரொக்கம், 15 கிராம் தங்கம், 100 கிராம் வெள்ளி இருந்தது.
கடந்த ஜூலை மாதம் 16-ந் தேதி உண்டியல் திறக்கப்பட்டபோது ஆஞ்சநேயர் கோவில் உண்டியலில் ரூ.34 லட்சத்து 19 ஆயிரம் ரொக்கம், 26 கிராம் தங்கம், 28 கிராம் வெள்ளி, நரசிம்மசாமி கோவில் உண்டியலில் ரூ.17 லட்சத்து 93 ஆயிரத்து 157 ரொக்கம், 84 கிராம் தங்கம், 145 கிராம் வெள்ளி இருந்தது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story