கெலமங்கலம் அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது


கெலமங்கலம் அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது
x
தினத்தந்தி 14 Oct 2021 11:46 AM IST (Updated: 14 Oct 2021 11:46 AM IST)
t-max-icont-min-icon

கெலமங்கலம் அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

ராயக்கோட்டை:
கெலமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது பைரமங்கலம் கிராமத்தை சேர்ந்த பசுவராஜ் மகன் திலிப்குமார் (வயது 27) என்பவர் அவரது வீட்டின் பின்புறம் வைத்து கஞ்சா விற்றதாக தெரிகிறது. உடனே போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்து 110 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Next Story