பூக்கள் விலை சரிவு


பூக்கள் விலை சரிவு
x
தினத்தந்தி 15 Oct 2021 5:16 PM IST (Updated: 15 Oct 2021 5:16 PM IST)
t-max-icont-min-icon

பூக்கள் விலை சரிவு

திருப்பூர்
திருப்பூர் தென்னம்பாளையம் மற்றும் காட்டன் மார்க்கெட்டில் சந்தை உள்ளது. இந்த சந்தைக்கு வருகிற பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி செல்வது வழக்கம். பண்டிகை நாட்களில் பூக்கள் விற்பனை அதிகமாக இருக்கும். பொதுமக்களின் தேவை மற்றும் பூக்கள் தட்டுப்பாட்டின் காரணமாக அதன் விலையும் அதிகமாக இருக்கும். இந்நிலையில் ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி பண்டிகைக்கு முன்பு வரை பூக்கள் விலை அதிகமாக இருந்தது. ஆனால் நேற்று சரிவை சந்தித்தது. அதன்படி நேற்று முன்தினம் ஒரு கிலோ ரூ.800க்கு விற்பனை செய்யப்பட்ட மல்லிகைப்பூ நேற்று ரூ.320க்கு விற்பனை செய்யப்பட்டது. இதுபோல் முல்லை ரூ.240க்கும், ஜாதிமல்லி ரூ.240க்கும், சம்பங்கி ரூ.120க்கும், செவ்வந்தி ரூ.120க்கும், பட்டுப்பூ ரூ.50க்கும், அரளி ரூ.150க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதுபோல் சம்பங்கி பூ  3 டன் விற்பனையாகாமல் தேக்கமடைந்தபடி இருந்தது. இதுபோல் பண்டிகைக்காக வியாபாரிகள் வாங்கி வந்த கரும்பும் பல டன்கள் விற்பனையாகாமல் தேக்கமடைந்துள்ளது. 

-----


Next Story