கோ ஆப்டெக்சில் சிறப்பு தள்ளுபடி விற்பனை
கோ ஆப்டெக்சில் சிறப்பு தள்ளுபடி விற்பனை
திருப்பூர்
திருப்பூர் காலேஜ் ரோடு அய்யப்பன் கோவில் அருகே கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை தொடக்க விழா நடைபெற்றது. கலெக்டர் வினீத் விற்பனையை தொடங்கி வைத்தார். தீபாவளி சிறப்பு விற்பனைக்காக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நெசவாளர்களால் உற்பத்தி செய்யப்பட்ட புதிய வடிவமைப்புகளுடன் கூடிய பட்டு, பருத்தி, சேலைகள், போர்வைகள், படுக்கை விரிப்புகள், தலையனை உறைகள், வேட்டிகள், லுங்கிகள், துண்டு ரகங்கள், ஆண்கள் அணியும் சட்டைகள், பெண்கள் விரும்பும் சுடிதார் ரகங்கள், ஆர்கானிக் பருத்தி சேலைகள், ஏற்றுமதி தரம் வாய்ந்த ஹோம் பர்னிசிங் ரகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
தீபாவளி விற்பனை இலக்காக ரூ.2 கோடியே 95 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கோ ஆப்டெக்சின் அனைத்து விற்பனை நிலையங்களிலும் 30 சதவீதம் சிறப்பு தள்ளுபடி விற்பனை செய்யப்படுகிறது. இந்த விழாவில் கோ-ஆப்டெக்ஸ் முதுநிலை மண்டல மேலாளர் பாலமுருகன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story