திருப்பூரில் கோவில்கள் திறப்பு


திருப்பூரில் கோவில்கள் திறப்பு
x
தினத்தந்தி 15 Oct 2021 6:51 PM IST (Updated: 15 Oct 2021 6:51 PM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் கோவில்கள் திறக்கப்பட்டதால், சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்தனர்.

திருப்பூர்
திருப்பூரில் கோவில்கள் திறக்கப்பட்டதால், சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்தனர். 
கோவில்கள் 
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. இதன் காரணமாக தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் தீவிரப்படுத்தப்பட்டன. அதன்படி தமிழகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. உணவகங்கள், ஓட்டல்கள் செயல்படும் நேரத்தில் கட்டுப்பாடு மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான கோவில்கள், தியேட்டர்கள் உள்ளிட்டவைகளுக்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. 
இதற்கிடையே கொரோனா தொற்று குறைய, குறைய பல்வேறு தளர்வுகளும் வழங்கப்பட்டன. அதன்படி கோவில்களில் வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் சாமி தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டது. மற்ற நாட்களில் மற்றும் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. 
பக்தர்கள் மகிழ்ச்சி 
இதனால் அனைத்து நாட்களிலும் கோவில்களை திறக்க வேண்டும் என பக்தர்கள் பலரும் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ள தளர்வில் வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களிலும் கோவில்களில் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கியுள்ளது. 
அதன்படி நேற்று விஜயதசமியையொட்டி திருப்பூரில் உள்ள ஈஸ்வரன் கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் பலரும் சாமி தரிசனம் செய்ய வந்தனர். இவ்வாறு வந்த பக்தர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டது. மேலும், கிருமிநாசினியும் வழங்கப்பட்டது. இதன் பின்னரே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். நீண்ட நாட்களுக்கு பிறகு வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளி்ல சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

Next Story