கலப்பட டீத்தூள் பறிமுதல்
கலப்பட டீத்தூள் பறிமுதல்
திருப்பூர்
திருப்பூர் கலெக்டர் வினீத் உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி விஜயலலிதாம்பிகை தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர் பாலமுருகன் மற்றும் குழுவினர் அவினாசி, செங்கப்பள்ளி பகுதிகளில் 17 கடைகளில் ஆய்வு நடத்தினார்கள். ஒரு கடையில் கலப்பட டீத்தூள் 1½ கிலோ கண்டறியப்பட்டு பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. அந்த கடைக்கு உணவு பாதுகாப்பு தரங்கள் சட்டத்தின் கீழ் எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது.
ஆய்வின்போது 7 கடைகளில் புகையிலை பொருட்கள் கண்டறியப்பட்டு முதல் முறை குற்றத்துக்காக 6 கடைகளுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இரண்டாம் முறை குற்றம் செய்த ஒரு கடைக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
பண்டிகை காலம் என்பதால் இனிப்பு, காரம் தயாரிப்பு மற்றும் விற்பனை நிலையங்கள், பேக்கரிகளில் ஆய்வு மேற்கொண்டனர். பால் மற்றும் பால் சார்ந்த இனிப்பு வகைகள் தனியாக பேக்கிங் செய்து விற்பனை செய்யவும், மற்ற இனிப்பு வகைகள் தனியாக பார்சல் செய்து விற்பனை செய்யவும் அறிவுறுத்தப்பட்டது.
Related Tags :
Next Story