திண்டுக்கல் அருகே 135 கிலோ புகையிலை பொருட்கள் பதுக்கியவர் கைது


திண்டுக்கல் அருகே 135 கிலோ புகையிலை பொருட்கள் பதுக்கியவர் கைது
x
தினத்தந்தி 15 Oct 2021 7:58 PM IST (Updated: 15 Oct 2021 7:58 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் அருகே 135 கிலோ புகையிலை பொருட்கள் பதுக்கியவர் கைது செய்யப்பட்டார்.

குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் தாலுகா போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மளிகை கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்டின் தினகரன், சப் இன்ஸ்பெக்டர்கள் மலைச்சாமி, ஜாபர், ஏட்டுகள் காளீஸ்வரன், ராஜகுரு ஆகியோர் நேற்று முன்தினம் திண்டுக்கல் அருகே குட்டத்து ஆவாரம்பட்டி பகுதியில் உள்ள மளிகை கடைகளில் சோதனை நடத்தினர். அப்போது சேவியர் (வயது 53) என்பவரது பெட்டிக்கடையில் பான்மசாலா, குட்கா என 135 கிலோ புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து இருந்தது தெரியவந்தது. இதையடுத்து சேவியரை போலீசார் கைது செய்தனர்.

Next Story